Asianet News TamilAsianet News Tamil

தோனி மேல அம்புட்டு பாசம் ! அதுதான் அப்படிப் பேசிட்டேன் … மன்னிப்புக் கேட்ட சிறுவன் !!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர் தூக்கில் தொங்குவார் என்று கதறி அழுத சிறுவன்  தற்போது அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளான்.

dhoni out boy crying
Author
Chennai, First Published May 17, 2019, 8:16 AM IST

ஹைதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடந்த 12 ஆம் தேதி களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

dhoni out boy crying

இதனிடையே போட்டியில் கேப்டன் தோனி, ரன் அவுட் ஆனார். ஆனால் தோனியின் விக்கெட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 3-வது நடுவர் தோனிக்கு அவுட் வழங்கினார். 

தோனி அவுட் ஆனதால் சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதில், அந்தச் சிறுவன் தோனி அவுட் இல்லை என்றும் அவுட் கொடுத்த 3 வது நடுவர் தூக்கில் தொங்குவார் எனவும் கூறி கதறி அழுதான்.

dhoni out boy crying

இந்நிலையில் அந்தச் சிறுவன் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளான். இதுதொடர்பாக பேசிய  சிறுவன் என்னுடைய பெயர் கிருதிகேஷ். அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன். 

நான் தான் 3 வது நடுவரை திட்டி அழுதது. அவ்வாறு திட்டியதற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். நான் சிஎஸ்கே மீது உள்ள பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன். தோனி என் வீட்டுக்கு வந்தால் காலை தொட்டு கும்பிடுவேன். தோனியை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios