Asianet News TamilAsianet News Tamil

30 ஆண்டுகளில் முதல்முறை: அயோத்தியில் கோயில் பணிகளை நிறுத்தியது விஸ்வ இந்து பரிசத்..!

அயோத்தி தீர்ப்பு எந்நேரமும் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படும் வேளையில், விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) 30 ஆண்டுகளில் முதல் முறையாக அயோத்தியில் ராமர் கோயிலுக்கான நடைபெற்று வரும் கல் செதுக்கும் பணிகளை நிறுத்தியுள்ளது.

VHP stopped their work in ayodhya
Author
Ayodhya, First Published Nov 8, 2019, 6:43 PM IST

அயோத்தி தீர்ப்பு எந்நேரமும் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படும் வேளையில், விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) 30 ஆண்டுகளில் முதல் முறையாக அயோத்தியில் ராமர் கோயிலுக்கான நடைபெற்று வரும் கல் செதுக்கும் பணிகளை நிறுத்தியுள்ளது.விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு 1990 முதல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தியில் நிர்மான் கார்யாஷாலாவில் ராமர் கோயிலுக்கான கல் மற்றும் மார்பிள் செதுக்கும் பணிகளை வி.எச்.பி. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் வி.எச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். 6 மாதத்துக்கு தடை செய்யப்பட்டன. அப்போதும் கோயிலுக்கான கல் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

VHP stopped their work in ayodhya
உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தபோது, ராமர் கோயிலுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலிருந்து கற்கள் அதிகளில் இறக்குமதி செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுவரை 1.25 லட்சம் கன அடி கற்கள் செதுக்கப்பட்டு ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தயாரர் நிலையில் உள்ளதாக வி.எச்.பி. தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளதால், வி.எச்.பி. 30 ஆண்டுகளில் முதல் முறையாக  ராமர் கோயிலுக்கான கல் மற்றும் மார்பிள் செதுக்கும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.

VHP stopped their work in ayodhya

கரசேவக்புரத்தில் பணிபுரிந்து வந்த பெரும்பான்மையான சிற்பிகள் குஜராத்துக்கு திரும்பி சென்றுள்ளதாக தகவல்.
வி.எச்.பி. செய்தி தொடர்பாளர் சரத் சர்மா இது குறித்து கூறுகையில், ஆமாம். நாங்கள் கல் சிற்ப வேலைகளை நிறுத்தி உள்ளோம். அடுத்து கல் பணிகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து ராம் ஜென்மபூமி நியாஸ் முடிவு செய்யும் சங்கத்தின் தலைமை முடிவு எடுக்கும் என தெரிவித்தார். கரசேவபுரத்தில் கல் பணிகள் நிறுத்தப்பட்டாலும், ராமர் கோயில் கட்டுவற்கான சந்தா தொடர்ந்து பெறப்பட்டு வருவதாக தகவல்.

Follow Us:
Download App:
  • android
  • ios