Asianet News TamilAsianet News Tamil

கடித்த பாம்பின் தலையைக் கடித்து துப்பிய விவசாயி! அதிர்ச்சி அளிக்கும் விவசாயியின் விளக்கம்!

The farmer who bitten the head of the snake
The farmer who bitten the head of the snake
Author
First Published Feb 21, 2018, 2:40 PM IST


பாம்பு கடித்ததால் ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர், அதன் தலையை கடித்து துப்பிய சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. கடித்த பாம்பை பழி வாங்கவே அப்படி செய்ததாக விவசாயி கூறியது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சோனேலால். இவர் தனது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று இவரை கடித்துள்ளது. பாம்பு கடித்ததால் ஆத்திரமடைந்த விவசாயி சோனேலால், பாம்பை பிடித்து அதன் தலையைக் கடித்து துப்பியுள்ளார். பாம்பு கடித்ததால் மயக்கமடைந்துள்ளார் விவசாயி சோனேலால்.

The farmer who bitten the head of the snake

மயங்கி கிடந்த சோனேலாலைப் பார்த்த அவரது உறவினர்கள், பாம்பு கடித்ததால், மயங்கி விழுந்திருக்கலாம் என்று கருதி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், பாம்பு கடித்த அடையாளமே அவரது உடலில் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு, சோனேலால் நினைவு திரும்பிய பிறகு நடந்ததைக் கூறியுள்ளார்.

The farmer who bitten the head of the snake

நான் எனது கால்நடைகளுக்காக புற்களை அறுத்து எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை ஒரு பாம்பு கடித்தது. அதனால், என்னைக் கடித்த பாம்பை பழிவாங்க அதனைப் பிடித்து அதன் தலையைக் கடித்து மென்று துப்பினேன் என்று கூறியுள்ளார். சோனேலால் மயங்கியதற்கான காரணம் மருத்துவர்களுக்கு விளங்கியது. பாம்பின் தலையைக் கடித்ததாலேயே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். மற்றபடி பாம்பு அவரை கடிக்கவில்லை. சோனேலாலுக்கு போதைப்பழக்கம் இருந்து வருவதாகவும் அதன் தாக்கத்தினால் இப்படி நடந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். இதுபோன்ற ஒரு கேஸை தான் பார்த்ததே இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாம்பின் தலையைக் கடித்து துப்பிய செய்தி, தற்போது வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios