Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றம்... உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் மட்டும் காலை நேரத்திலும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி அன்று அதிகாலை 4.30 முதல் காலை 6.30 வரை தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Supreme Court changes cracker bursting only for Tamil Nadu time
Author
Delhi, First Published Oct 30, 2018, 12:43 PM IST

தமிழகத்தில் மட்டும் காலை நேரத்திலும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி அன்று அதிகாலை 4.30 முதல் காலை 6.30 வரை தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என கூறி தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. Supreme Court changes cracker bursting only for Tamil Nadu time

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் பட்டாசு விற்பனைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பட்டாசு வெடிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. Supreme Court changes cracker bursting only for Tamil Nadu time

மேலும் பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் மட்டும் காலை நேரத்திலும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயம் நாடுமுழுவதிலும் மொத்தம் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 Supreme Court changes cracker bursting only for Tamil Nadu time

தமிழகத்துக்கு ஏற்ற நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அது காலையோ அல்லது மாலையோ நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios