Asianet News TamilAsianet News Tamil

ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி... பாஜகவின் அதிரிபுதிரி முடிவு!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Smrithi contest in amethi
Author
Delhi, First Published Mar 16, 2019, 10:26 AM IST

Smrithi contest in amethi

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி. இந்தத் தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் டி.வி. நடிகையும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி போட்டியிட்டார். கடந்த காலங்களைப்போல அல்லாமல் ஸ்மிருதி இராணி கடும் போட்டியை ராகுல் காந்திக்கு அளித்தார். ராகுல் காந்தி 4 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில் ஸ்மிருதி 3 லட்சம் வாக்குகளைப் பெற்றார். தோல்வியடைந்தாலும் மாநிலங்களவை உறுப்பினராகி மத்திய அமைச்சரானார் ஸ்மிருதி.Smrithi contest in amethi
 இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் மீண்டும் ஸ்மிருதியைக் களம் இறக்க பாஜக முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மிருதி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இந்தப் பதவி 2023-ம் ஆண்டு வரை உள்ளது. என்றாலும் கடந்த முறை போல இந்த முறையும் அவரை களமிறக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Smrithi contest in amethi
உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில்தான் அமேதி உள்ளது. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிரியங்காவை ராகுல் களமிறக்கி உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் போட்டி அளிக்கக்கூடிய பலமான வேட்பாளராக ஸ்மிருதி இருப்பார் என்பதால், அவரையே அக்கட்சி நிறுத்தும் என டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios