Asianet News TamilAsianet News Tamil

சபரிமலையில் தொடரும் பதற்றம்... 200 பேர் மீது வழக்கு!!!

சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

SabarimalaTemple heavy security deployed at Nilakkal
Author
Kerala, First Published Oct 20, 2018, 10:10 AM IST

சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SabarimalaTemple heavy security deployed at Nilakkal

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சூழலில் சபரிமலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக பெண் நிருபர்கள் செல்ல முயன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து பெரும் புயலை கிளப்பி உள்ளன. SabarimalaTemple heavy security deployed at Nilakkal

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 2 பெண்கள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சன்னிதானம் வரை சென்று போது, அவர்கள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்து நடைபந்தல் பகுதியில் சன்னிதானத்திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சரண கோஷம் எழுப்பி பக்தர்கள், அவர்களின் கடும் எதிர்பாலும் 2 பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். SabarimalaTemple heavy security deployed at Nilakkal

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சபரிமலையில் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பேராட்டம் தொடர்ந்து வருவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios