Asianet News TamilAsianet News Tamil

சபரிமலையை முற்றுகையிட காத்திருக்கும் 300 இளம்பெண்கள்...!

சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 இளம்பெண்கள் தரிசனம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

sabarimala temple...300 womens ready
Author
Kerala, First Published Dec 26, 2018, 11:48 AM IST

சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 இளம்பெண்கள் தரிசனம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இளம் பெண்கள் சபரிமலை செல்ல எதிர்ப்பு தெரிவித்து பாஜ மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘மனிதி’ அமைப்பின் 11 இளம் பெண்கள் நேற்று முன்தினம் சபரிமலை செல்வதற்காக பம்பை வந்தனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர். sabarimala temple...300 womens ready

இதைதொடர்ந்து கோழிக்கோடு, கொயிலாண்டியை சேர்ந்த பிந்து(44), மலப்புரம் பெரிந்தல் மண்ணாவை சேர்ந்த கனகதுர்கா(42) என்ற 2 பெண்கள் இருமுடி கட்டி நிலக்கல்லுக்கு வந்தனர். அப்பாச்சிமேடு வரை எந்த சிரமமும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அவர்களை தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள் கண்டு முற்றுகையிட்டு தடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் போராட்டம் அதிகரித்த நிலையில் கனகதுர்கா திடீரென மயக்கமடைந்தார். பின்னர் போலீசார் 2 பெண்களிடமும் பதற்றம் நிலவுவதால் தரிசனத்திற்கு செல்ல முடியாது என்று விளக்கி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தாங்கள் சபரிமலைக்கு மீண்டும் கண்டிப்பாக வருவோம் என்று தெரிவித்தபடி சென்றனர்.

இந்நிலையில் வயநாடை சேர்ந்த அம்மிணி (45) என்ற பெண் கோட்டயம் எஸ்பி ஹரிசங்கரிடம், சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். பின்னர் போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்தார். எனவே மண்டல பூஜையான 27ம் தேதி கண்டிப்பாக தரிசனம் செய்ய செல்வேன் என்று அம்மணி கூறியுள்ளார். sabarimala temple...300 womens ready

இதையொட்டி வரும் 27ம் தேதிக்குள் மேலும் 300 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பாக ஆயிரம் ஆண்களும் வர திட்டமிட்டுள்ளனர். இவர்களின் வருகைக்கு முன்னோடியாகத்தான் மனிதி அமைப்பினர் மற்றும் பிந்து, கனகதுர்காவும் ேசாதனைக்காக வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பிந்து, கனகதுர்காவுக்கு சிபிஐஎம்முடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது வர உள்ள 300 இளம்பெண்கள் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி, கோழிக்கோடு மாவட்டம் வடகரை, கொயிலாண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சிபிஐஎம் கட்சியை சேர்ந்தவர்கள். தீவிர இடதுசாரி தொண்டர்கள்தான் இவர்களுக்கு தலைமை தாங்குகின்றனர். இதற்காக இவர்கள் மிகவும் ரகசியமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஆட்களை திரட்டி வருகின்றனர். மேலும் இவர்களுடன் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்பட பல்ேவறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வர உள்ளனர். இவர்கள் சபரிமலை வருவதற்கு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உள்ள நாட்களை தேர்வு செய்துள்ளனர். அதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். sabarimala temple...300 womens ready

இதனிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கேரளாவில் 37 மையங்களில் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வாரு மையங்களிலும் 250 முதல் 350 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த பெரும்பாலானோர் முகாம்களுக்கு சென்று விடுவார்கள். இதனால் சபரிமலையில் தங்களுக்கு எதிர்ப்பு எதுவும் இருக்காது என்று கருதுகின்றனர். இதனால் இந்த தேதியில் வர தீர்மானித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை கேரள போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறையின் ரகசிய தகவலால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios