Asianet News TamilAsianet News Tamil

ஆயிரத்து 400 பேரை உள்ளே தள்ளிய கேரள அரசு…. சபரிமலையில் போராடியவர்களை கிரில் பண்ணும் பினராயி….

சபரிமலையில் பெண்கள் நுழையகூடாது என கடும் போராட்டத்தில் ஈடுபட்ட  1400 பேரை கேரள போலீரசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. இதனக் கண்டித்து இன்று கேரளாவில் பாஜகவினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.

protesters in sabarimala arrested
Author
Sabarimala, First Published Oct 26, 2018, 7:57 AM IST

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது உள்ள பெண்கள் தவிர மற்றவர்கள் செல்ல அனுமதியில்லை எனும் பாரம்பரிய நடைமுறை நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன

protesters in sabarimala arrested

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கோயில் திறந்தபின் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.

இதனால், சபரிமலை அந்த 5 நாட்களாக மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க 50 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் அனைவரும் போராட்டக் காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

protesters in sabarimala arrested

இந்நிலையில்  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் நேற்று முதல் போலீஸார் தீவிரமாக இறங்கினார்கள். கடந்த இரு நாட்களில் இதுவரை 440 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 1,407 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

protesters in sabarimala arrested

இது குறித்து மாநில போலீஸார் தலைவர் லோக்நாத் பேரா செய்தியாளர்களிடம் பேசும்போது,  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,407 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், சந்தேகத்துக்குரியவர்கள் 200 பேரின் புகைப்படங்கள் மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களையும் இனி கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.

சபரிமலையில், சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகியஇடங்களில் கூடுதலாகக் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார் கேரள டிஜிபி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios