Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு ஆப்பு உறுதி... மோடியை வீழ்த்த ராகுலோடு இணைந்த ஹர்திக் பட்டேல்...!

குஜராத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்த பட்டேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேல் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி உள்ளார்.

Patidar leader Hardik Patel joined Congress party
Author
Gujarat, First Published Mar 12, 2019, 5:46 PM IST

குஜராத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்த பட்டேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேல் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். 

குஜராத் மாநிலத்தில் அதிகமாக வசிக்கும் படேல் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஹர்திக் படேல் பல கட்ட போராட்டங்களை நடத்தியவர். குஜராத் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தி நாடு முழுவதும் பிரபலமடைந்தார். 2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தார். Patidar leader Hardik Patel joined Congress party

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க ஹர்திக் படேல் முடிவு செய்திருக்கிறார். சுயேச்சை வேட்பாளராக ஹர்திக் படேல் களமிறங்குவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு அளிக்கவும் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் நேரடியாகக் களமிறங்கும் என அக்கட்சி அறிவித்துவிட்டது. Patidar leader Hardik Patel joined Congress party

இதையடுத்து காங்கிரஸில் இணைந்து அந்தத் தொகுதியைக் கைப்பற்ற ஹர்திக் பட்டேல் காய் நகர்த்தி வந்தார். இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல்காந்தி, பிரியங்கா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படலே் இணைந்துள்ளார். Patidar leader Hardik Patel joined Congress party

குஜராத்தில் பட்டேல் இன மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இணைந்துள்ளதால் அக்கட்சி மேலும் பலமடைந்துள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்தது. ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதால் குஜராத்தில் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios