Asianet News TamilAsianet News Tamil

மெகா கூட்டணிக்கு ஆப்பு... சந்திரசேகர ராவின் பலே பிளான்...!

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற சில முக்கிய கட்சிகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், அக்கட்சிகளை வளைத்துப்போட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முயற்சி செய்து வருகிறது.

Parliment election...Chandrasekhar Rao master plan
Author
Telangana, First Published Jan 10, 2019, 11:52 AM IST

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற சில முக்கிய கட்சிகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், அக்கட்சிகளை வளைத்துப்போட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முயற்சி செய்து வருகிறது.

மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியில் சேர தயங்கி வருகின்றனர். உ.பி.யில் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்து போட்டியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள். இதேபோல மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி மூத்தத் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்தக் கட்சிகளை காங்கிரஸ் கூட்டணிக்குக் கொண்டுவரும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடந்து ஈடுபட்டு வருகிறார். Parliment election...Chandrasekhar Rao master plan

இதற்கிடையே மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை காங்கிரஸ், பாஜக அல்லாத அணியில் சேர்க்க தெலங்கானா ராஷ்டிரிய கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் தீவிரமாக்கியிருக்கிறார். குறிப்பாக மாயாவதி அகிலேஷ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டு கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், மெகா அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரைச் சந்திக்கவும் சந்திர சேகர ராவ் முடிவு செய்திருக்கிறார். மம்தாவையும் சந்திக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் இறங்கியிருக்கிறார்.

 Parliment election...Chandrasekhar Rao master plan

இதற்கிடையே ஒடிஷா மாநில முதல்வரும் பிஜூ ஜனதாதளக் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கைச் சந்தித்து காங்கிரஸ், பாஜக அல்லாத அணிக்கு வர சந்திர சேகர ராவ் நேற்று அழைப்புவிடுத்தார். இந்த அணியில் சேர ஆர்வம் இருப்பதாகக் கூறியிருக்கும் நவீன் பட்நாயக், இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.Parliment election...Chandrasekhar Rao master plan

காங்கிரஸ், பாஜக கூட்டணியைச் சில முக்கிய கட்சிகள் தவிர்த்துவிட்ட நிலையில், மெகா அணி நிச்சயம் அமையும் என்று சந்திர சேகர ராவ் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார். இன்னும் ஒரு மாதம் போனால், மெகா அணி இருக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios