Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு ரத்து... ஈடு செய்ய காங்கிரஸ் கையெடுத்த முக்கிய திட்டம்..!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தலில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

neet exam... Congress party releases their election manifesto
Author
Delhi, First Published Apr 2, 2019, 2:38 PM IST

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தலில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் கீழ் 20 துணைக் குழுக்கள் பணியாற்றி தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

 neet exam... Congress party releases their election manifesto

அதில் நீட் தேர்வு சில மாநில மாணவர்களுக்கு எதிராக பாகுபாடுடன் உள்ளது. மேலும், மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது. அதாவது, மாணவர்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளிலேயே படிப்பதற்கு வகை செய்யும் மாநில அரசு உரிமையில் தலையிடுகிறது. நீட் தேர்வை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதற்கு பதிலாக மாநில அளவில் தரமான தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

 neet exam... Congress party releases their election manifesto

கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்தது. எனினும் மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.இந்நிலையில் நீட் தேர்வை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த தேர்வு முழுக்க முழுக்க சிபிஎஸ்இ தரத்தில் நடத்தப்படுவதால் அதை மாநில பாடப்பிரிவு மாணவர்கள் எதிர்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல்  தமிழகத்தில் சில மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி  போராட்டங்களை எதிர்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் முன்னெடுத்தன.  neet exam... Congress party releases their election manifesto

எதிர்ப்பை எதிர்க்கொள்ள முடியாமல் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாஜகவை மிரட்டும் அளவிற்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இடம்பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios