Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியை கவிழ்க்க சதி... 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம்...!

கர்நாடகாவில் பாஜகவுடன் சேர்ந்துகொண்டு போக்குக் காட்டிக்கொண்டிருக்கும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தூக்க சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

Karnataka Congress to intiate action against 4 rebel MLA
Author
Karnataka, First Published Feb 10, 2019, 3:18 PM IST

கர்நாடகாவில் பாஜகவுடன் சேர்ந்துகொண்டு போக்குக் காட்டிக்கொண்டிருக்கும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தூக்க சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நூலிழையில் பாஜக ஆட்சியைத் தவறவிட்டது. இதனால், காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து ஆட்சியமைத்தன. ஆனால், இந்த அரசை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைக்க பாஜக முயற்சி மேற்கொண்டதாகப் புகார் எழுந்தது. Karnataka Congress to intiate action against 4 rebel MLA

அதற்கேற்ப காங்கிரஸில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு வழிகளில் காங்கிரஸ் -மஜக கூட்டணி ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நடத்திய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்தனர். இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Karnataka Congress to intiate action against 4 rebel MLA

ஆனால், கூட்டத் தொடரை 4 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதன் காரணமாகச் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று பாஜக அமளியில் ஈடுபட்டது. இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை புறக்கணித்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. Karnataka Congress to intiate action against 4 rebel MLA

இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் சித்தராமையா சார்பில் சபாநாயகரிடம் கடிதம் தரப்பட்டுள்ளது. கர்நாடக அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் நால்வரும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios