Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக உருவெடுக்கிறது ஜம்மு-காஷ்மீர்..!

ஜம்மு-காஷ்மீர் நாட்டின் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகவும், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2-வது மிகப் பெரிய யூனியன் பிரதேசமாக லடாக் அமைந்துள்ளது. 

Jammu and Kashmir to be largest Union Territory
Author
Jammu and Kashmir, First Published Aug 6, 2019, 12:08 PM IST

இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் நாட்டிலேயே மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக உருவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா-நாகர் ஹவேலி, லட்சத்தீவு, அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகார் என 7 யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே உள்ளன. இதில் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களாக உள்ளன. Jammu and Kashmir to be largest Union Territory

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. Jammu and Kashmir to be largest Union Territory

இதையும் படிங்க;- இன்று காஷ்மீரில் கைவைத்த பாஜக நாளை தமிழகத்தில் வாலாட்டாதா..? கொந்தளிக்கும் ப.சிதம்பரம்...!

அத்துடன், ஜம்மு-காஷ்மீர் நாட்டின் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகவும், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2-வது மிகப் பெரிய யூனியன் பிரதேசமாக லடாக் அமைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios