Asianet News TamilAsianet News Tamil

நான் ஒரு பூசாரி! அந்த கடவுள்களுக்கு தொண்டு செயவதே என் பணி: மோடி சொன்ன கடவுள் யார்?

I am a priest My task is to work for these gods Who is the God who said Modi
I am a priest My task is to work for these gods Who is the God who said Modi
Author
First Published Dec 16, 2017, 9:28 PM IST


ஸ்கேட்டிங் கிரவுண்டு போல் வழுக்கிக் கொண்டு விரைகிறது வாழ்க்கை. நிற்கவும் நேரமில்லை, அமரவும் நேரமில்லை, பறக்கும் நிமிடங்களில் கிடைக்கும் ஓய்வு நொடிகளில் மளமளவென நீங்கள் வாசித்து மண்டையில் ஏற்றிக் கொள்ள இதோ சில துணுக்குகள்...
*    இத்தாலியில் நடைபெற்ற தங்களின் திருமணத்தின் புகைப்படங்களை ஒரு பத்திரிக்கைக்கு விற்று, அதில் கிடைத்த வருமானத்தை ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்திருக்கிறது விராட் - அனுஷ் ஜோடி!
வாழ்த்துக்கள்.
*    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜனநாயகத்துக்கு உட்பட்ட யுக்திகளை தி.மு.க. செயல்படுத்தும் : 
- கனிமொழி
*    குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற இடத்தில் முதன் முறையாக ‘ஸீ பிளேன்’னில் பறந்து சிலிர்த்திருக்கிறார் மோடி
*    ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசு சட்டம் நிறைவேற்றிய பின்பு, 5 காளைகள் இறந்துள்ளன. காளைகளை அடக்க முயன்ற 15 பேர் இறந்துள்ளனர். 
- விலங்குகள் நல வாரியம். 
*    கோவை சிறையில் கவுசல்யாவின் அம்மா அன்னலட்சுமி தனக்கென ஒரு டீமை உருவாக்கிக் கொண்டு சுற்றினார். தனி ராஜ்ஜியம் நடத்தினார்.
-    ஹைட்ரோகார்பன் போராளி வளர்மதி
*    மம்மூட்டி ‘கசப’ படத்தில் பெண்களைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார்.
-    நடிகை பூ பார்வதி
*    மு.க.ஸ்டாலினுடைய அப்பாவே அவரை நம்பாததால்தான் அவருக்கு ‘செயல் தலைவர்’ பதவி மட்டும் கொடுத்திருக்கிறார். இவரை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்?
- எடப்பாடி பழனிசாமி
*    ஸ்டாலின் டீதான் குடிப்பார். ஆனால் நான் டீக்கடையே நடத்தியவன் 
-    ஓ.பன்னீர்செல்வம்
*    ஒக்கி புயல் பாதிப்பு நிலவரம் குறித்துப் பேச டெல்லி சென்றதன் மூலம் தமிழக முதல்வர் செய்ய வேண்டிய வேலையை கவர்னர் செய்திருக்கிறார். 
*    நாட்டிலுள்ள 125 கோடி மக்களும் எனது கடவுள். நான் அவரக்ளுக்கு பூஜை செய்யும் பூசாரி. நான் அவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்!
- பிரதமர் மோடி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios