Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்காக வந்துடுச்சி மொபைல் ஆப்ஸ்!

Government to launch mobile app for retiring government employees
Government to launch mobile app for retiring government employees
Author
First Published Sep 19, 2017, 5:57 PM IST


ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான புகார்கள், ஓய்வூதியம்செட்டில்மென்ட் நிலை ஆகியவை குறித்து அறிந்து கொள்ள புதிய மொபைல்செயலியை(ஆப்ஸ்) மத்திய அரசு இன்று அறிமுகம் செய்கிறது.

ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கான தனியாக இணையதளத்தில் ஒரு போர்ட்டல்இருந்தாலும், தனியாக ஒரு மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை இணையதளத்தின் கீழ் இந்த மொபைல் ஆப்ஸ் வருகிறது.

இந்த செயலி மூலம், ஓய்வூ பெற்ற அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வு கால பணப் பயன்கள் எப்போடு கிடைக்கும், அதன் நிலை,  ஓய்வூதிய தொகை ஆகியவற்றை ‘பென்ஷன்கால்குலேட்டர்’ மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலில் ஓய்வூதியம் தொடர்பான புகார்கள் பதிவு செய்து, அதன் நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய  பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் இந்த செயலியை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். ேமலும், அரசு துறையில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு விருது வழங்கியும் கவுரவிக்க உள்ளார்.

மேலும், ஓய்வு பெறும் நிலையில் உள்ள 300 ஊழியர்களுக்கு கவுன்சிலிங் நிகழ்ச்சியும், ஓய்வுக் குழந்தையை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஓய்வு பெற்றபின் வாழ்க்கையை எப்படி வழிநடத்துவது, திட்டமிடுவது குறித்து அரசு ஊழியர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்படும்.

மேலும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவ வசதி, தன்னார்வத் தொண்டில் ஈடுபடுத்துதல், ஓய்வுக்கு பிந்தய செயல்திட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகைகள், முதலீட்டில் கிடைக்கும் சலுகைகள், நிதித் திட்டங்கள் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios