Asianet News TamilAsianet News Tamil

டிசம்பர் 7 கொடி நாள்… ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம்… அவர்களின் பணியைப் போற்றுவோம்… ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. அழைப்பு !!

டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் ராணுவ கொடி நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்து நாட்டுக்காகவும், சாட்டு மக்களுக்காகவும் போராடி வரும் ராணுவ வீர்களை போற்றுவோம் என்றும், கொடி நாளுக்காக அவர்களுக்கு நாம் தாராளமாக உதவுவோம் என்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

flag day rajeev chndrasekar  twitter
Author
Bangalore, First Published Dec 2, 2018, 9:41 AM IST

கொடி நாள் என்பது இந்திய  முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

flag day rajeev chndrasekar  twitter

தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

flag day rajeev chndrasekar  twitter

அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை கொடி நாள் வாரம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், போர், இயற்வை பேரழிவு போன்ற காலங்களில் இந்தியாவையும், இநதிய மக்களையும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காத்து வரும் ராணுவ வீரர்களை நாம் போற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

flag day rajeev chndrasekar  twitter

அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

flag day rajeev chndrasekar  twitter

மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ராணுவ வீர்களுக்கு உதவும் வகையில், அரசு அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும் கொடிகளை வாங்கி அவர்களுக்கு உதவுவோம் என்றும், பணமாகவோ, காசோலையாகவோ, செக்காகவோ நாம் கொடுக்கும் ஒவ்வொரு பணமும் அவர்களது குடும்பத்திற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

flag day rajeev chndrasekar  twitter

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது எனவும் ராஜீவ் சந்திர சேகர் குறிப்பிட்டுள்ளார். 

flag day rajeev chndrasekar  twitter

இவரது டுவீட்டைப்  பாராட்டியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  கொடி நாள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டதற்கு நன்றி தெரிவித்து, அதை அமைச்சர் ரீடுவிட் செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios