Asianet News TamilAsianet News Tamil

ஓட்டுநர் முஸ்லீம் என்றால் டாக்சியை ரத்து செய்வதா? வி.எச்.பி. பிரமுகருக்கு ஓலா நிறுவனம் சாட்டையடி பதில்!

Dont want to give my money to jihadis - Abhishek Mishra
Dont want to give my money to jihadis - Abhishek Mishra
Author
First Published Apr 23, 2018, 1:43 PM IST


ஓலா கால் டாக்சி ஓட்டுநர் முஸ்லீம் என்பதால், புக் செய்யப்பட்டதை ரத்து செய்ததாக 
கூறிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் மிஸ்ராவுக்கு ஓலா நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் அபிகேஷக் மிஸ்ரா. கடந்த 2014 ஆம் ஆண்டு, நான் மோடியை ஆதரிக்கிறேன் என்ற அணிக்காக விருது பெற்றவர் இவர்.

அபிகேஷ் மிஸ்ரா, தனது டுவிடட்ர் பக்கத்தில், தான் ஓலா கால டாக்சியை புக் செய்ததாகவும், ஓட்டுநர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கால் டாக்சியை ரத்து செய்தேன். என்னுடைய பணம் ஜிகாதி மக்களுக்கு அளிக்க விரும்பவில்லை. எனவே கால் டாக்சியை ரத்து செய்தேன் என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த பதிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரின் இந்த பதிவுக்கு, ஓலா நிறுவனம் சாட்டையடி பதிலளித்துள்ளது. ஓலா நிர்வாகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நமது நாடு மதச்சார்பற்றது; எங்கள் ஓட்டுநர்கள், பங்கீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் என யாரையும் ஜாதி, மதம், இனம் அல்லது சமயத்தின் அடிப்படையில் பாகுபடுத்தி பார்ப்பதில்லை. அனைவரிடமும், அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியாக மதியுங்கள் என வலியுறுத்தியுள்தாக அபிஷேக் மிஸ்ராவுக்கு, ஓலா நிர்வாகம் பதிலளித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios