Asianet News TamilAsianet News Tamil

இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு கட்டணம் இல்லை… பத்திரமாக கொண்டு சேர்ப்பது பொறுப்பு… டெல்லியில் இப்படி ஒரு ஆட்டோ ஓட்டுநர்….

டெல்லியைச் சேர்ந்த நேகா தாஸ் பணி முடித்துவிட்டு லேட்டாக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அவர் சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவரா உள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

delhi auto driver no charges for girls in late night
Author
Delhi, First Published Nov 5, 2018, 7:16 PM IST

பொதுவாக பெண்கள் தனியாக பயணம் செய்வது என்பது தற்போது அபாயகரமாக மாறி வருகிறது. அதுவும் டெல்லியில் சொல்லவே வேண்டாம். அதுவும் இரவு நேரம் என்றால் பல சம்பவங்கள் நினைவுக்கு வருவதால் அத்தகைய பயணங்கள் மேலும் அபாயமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் டில்லியில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் இரவில் தனியாக வந்த பெண்ணை பத்திரமாக சேர்த்து விட்டு கட்டணம் வாங்கவும் மறுத்துள்ளார்.

delhi auto driver no charges for girls in late night

இது குறித்து அந்தக் பெண் தனது முகநூலில் பதிவிட்டு பெருமைப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர்  நேகா தாஸ். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அவர், நேற்றுமுன்தினம் இரவு தனது வேலையை முடிக்கும் போது மிகவும்  லேட்டாகிவிட்டது. இதையடுத்து அவசர, அவசரமாக சாலைக்கு வந்த அவர் ஆட்டோ தேடி இருக்கிறார். இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது.

delhi auto driver no charges for girls in late night

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி தான் போகவேண்டிய  இடத்தை சொல்லியுள்ளார். அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவர் பெயர் பிரவின் ரஞ்சன். ஆளரவற்றம் அற்ற சாலையில் தனியாக நேகா நிற்பதைக் கண்டு இரக்கப்பட்ட ரஞ்சன் தனது ஆட்டோவில் அவரை ஏற்றிக் கொண்டு நேகாவின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். நேகாவை பத்திரமாக கொண்டு சேர்த்த அவரிடம் நேகா கட்டணம் எவ்வளவு ஆகி உள்ளது எனக் கேட்டுள்ளார்.

 

அதற்கு ரஞ்சன் "நான் தனியே இரவில் செல்லும் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும்,  அந்தப் பெண்களை பத்திரமாக அவர்கள் இல்லத்தில் சேர்த்தாலே எனக்கு போதுமானது எனவும் பதிலளித்துள்ளார்.

delhi auto driver no charges for girls in late night

இதனால் மனம் நெகிழ்ந்த நேகா அவருடைய புகைப்படத்தை தனது முகநூலில் பதிந்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் ரஞ்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

டில்லி மாநகரத்தில் பல கொடூர சம்பவங்கள் நிகழும் நேரத்தில் இப்படி ஒரு மனிதர் நிஜமாகவே இருக்கிறாரா" என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios