Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் கட்சி முரண்டு... லல்லு கட்சி எரிச்சல்..!

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அகிலேஷும் மாயாவதியும் கைகழுவி விட்ட நிலையில், பீகாரில் லாலு பிரசாத் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Congress rejects RJD seat-sharing formula
Author
Bihar, First Published Jan 13, 2019, 4:57 PM IST

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அகிலேஷும் மாயாவதியும் கைகழுவி விட்ட நிலையில், பீகாரில் லாலு பிரசாத் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பீகாரில் லாலு கட்சியின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸும் நீண்ட நாட்களாகக் கூட்டணி கட்சிகளாக இருக்கின்றன. 2015-ம் ஆண்டில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் லல்லு அமைத்த கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே லல்லு கட்சியும் காங்கிரசும் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. Congress rejects RJD seat-sharing formula

பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 18, காங்கிரஸ் 10, ராஷ்ட்ரீய லோக் சமதா, இடதுசாரிகளுக்கு தலா நான்கு தொகுதிகள், உதிரி கட்சிகளுக்கு எஞ்சிய தொகுதிகளை ஒதுக்க உத்தேசிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 20 தொகுதிகள் வேண்டும் என லாலு பிரசாத் கட்சியிடம் கேட்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. Congress rejects RJD seat-sharing formula

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் வெற்றிக்கு பிறகு காங்கிரஸுக்கு ஆதரவு கூடியுள்ளதாகக் கூறி, இந்த டிமாண்டை அக்கட்சி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்தப் பிடிவாதத்தால் கூட்டணியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதனால் லாலு கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மாநில தலைவர்களுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தையைத் தொடராமல், காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த லாலு கட்சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios