Asianet News TamilAsianet News Tamil

விக்ரம் லேண்டர் பற்றிய புதிய அப்டேட்... சற்றுமுன் இஸ்ரோ சிவன் வெளியிட்ட முக்கியத் தகவல்..!

தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் லேண்டரில் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்து தகவல் தெரிவிப்பர்.

chandrayaan 2 orbiter doing extremely well isro chief k sivan
Author
Tamil Nadu, First Published Sep 26, 2019, 4:24 PM IST

சந்திரயான்-2வின் விக்ரம் லேண்டரிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை. ஆனாலும் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். chandrayaan 2 orbiter doing extremely well isro chief k sivan

சந்திரயான் விண்கலனை  நிலவில் தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்த இந்தியா காத்திருந்தது.  ஜூலை 22 -ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 -ம் தேதி அதிகாலை சந்திரயான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

chandrayaan 2 orbiter doing extremely well isro chief k sivan

ஆனால், நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், சந்திரயான் - 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும்,  தங்களின் முயற்சியை கைவிடாமல் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. ஆனாலும், நாங்கள் மனம் தளராமல் எங்கள் அடுத்த பணியான ககன்யான் பணியை தொடர்ந்து செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். chandrayaan 2 orbiter doing extremely well isro chief k sivan

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’சந்திரயான்- 2 ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து வருகிறது. அதனுடைய அனைத்து இயக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், லேண்டரில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. லேண்டரில் என்ன தவறு? என்பது குறித்து ஆய்வு செய்யத் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் லேண்டரில் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்து தகவல் தெரிவிப்பர். அதன் அடிப்படையில் எதிர்காலத்திற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்படும். இதற்காக உரிய அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்’’என்று சிவன் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios