Asianet News TamilAsianet News Tamil

சிறுமிக்கு வரைந்த அபிநந்தன் மீசை... தீயாய்ப் பரவும் முறுக்கு மீசை மோகம்!

அபிநந்தனின் முறுக்கு மீசையைக் குறிக்கும் வகையில், ஒரு சிறுமி, பால் பவுடரில் வரைந்த மீசையுடன் காணப்படுகிறாள். 

Abhinandan beard advt
Author
India, First Published Mar 4, 2019, 6:34 AM IST

இந்திய ஹீரோவாகப் பார்க்கப்படும் விங் கமாண்டர் அபிநந்தனின் முறுக்கு மீசை இளைஞர்கள் மத்தியில் புதிய ஃபேஷனாகப் பார்க்கும் நிலையில், விளம்பர நிறுவனங்களும் அபிநந்தன் மீசையின் மீது பார்வையைத் திருப்பியுள்ளன. Abhinandan beard advt
இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் ரக விமானத்தில் பாகிஸ்தான் சென்று தாக்குதல் நடத்தியபோது அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார். பின்னர் 75 மணி நேரத்துக்கு பிறகு பாகிஸ்தான் அரசு அபிநந்தனை விடுவித்தது. அபிநந்தன் பாகிஸ்தான் வசம் இருந்தபோது வெளியான வீடியோக்கள், அவரை ரியல் ஹீரோவாக நாட்டு மக்கள் உயர்த்தியது. எதிராகளிடம் சிக்கியபோதும் தன்னுடைய ‘கட்’ஸை விடாமல், போகிறபோக்கில் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் அவர் பேசியது, அவரை வீரத் திருமகன் ஆக்கியது.Abhinandan beard advt
 நாடு திரும்பி தற்போது டெல்லி ராணுவ மருத்துவமனையில் இருக்கும் அபிநந்தனை இந்தியர்கள் கவுரவிக்கத் தொடங்கியுள்ளனர். நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்கு அபிநந்தன் எனப் பெயரிட்டு,. தங்கள் ஹீரோவுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் மக்கள். அவருடைய முறுக்கு மீசை மீது ஈர்ப்பு ஏற்பட்டு, இளைஞர்கள் அபிநந்தன் போன்றே மீசையை வைத்துக்கொள்ள சலூன் கடைகளுக்கு படையெடுக்கிறார்கள்.Abhinandan beard advt
இந்நிலையில் விளம்பர நிறுவனங்களின் பார்வையிம் அபிநந்தன் மீது குவிந்துள்ளது. அபிநந்தனின் முறுக்கு மீசையைக் குறிக்கும் வகையில், ஒரு சிறுமி, பால் பவுடரில் வரைந்த மீசையுடன் காணப்படுகிறாள். அந்த விளம்பரத்துக்கு, ‘அமுல் மீசை: அமுலில் இருந்து அபிநந்தனுக்கு' எனத் தலைப்பு கொடுத்துள்ளனர். விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாராட்டும் வகையில், இந்த வீடியோவை 'அமுல்'  நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மீசை விளம்பரம் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios