Asianet News TamilAsianet News Tamil

ஆழ்துளை கிணற்றில் மீண்டும் விழுந்த 5 வயது சிறுமி... மீட்கும் பணி தீவிரம்...!

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் 50 அடி ஆழத்தில் 5 வயது சிறுமி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

5-Year-Old Girl Falls Into Borewell In Haryana
Author
Haryana, First Published Nov 4, 2019, 11:06 AM IST

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் 50 அடி ஆழத்தில் 5 வயது சிறுமி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சிறுவன் சுஜித் சமீபத்தில் ஆள்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழக மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூட வேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சுஜித் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.

5-Year-Old Girl Falls Into Borewell In Haryana

இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். இதுதொடர்பாக உடனே காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

5-Year-Old Girl Falls Into Borewell In Haryana

50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டியதும்,  பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, சிறுமியை மீட்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios