Asianet News TamilAsianet News Tamil

அடுத்த தேர்தலிலும் மோடிதான் பிரதமர்… புதிய கருத்து சொல்றாரு பஸ்வான்!

வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ்வான் கூறியுள்ளார்.

5 state Assembly poll results won't impact... Ram Vilas Paswan
Author
Bihar, First Published Dec 14, 2018, 9:54 AM IST

வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ்வான் கூறியுள்ளார்.

சமீபத்தில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அடுத்து ஆட்சி அமைக்கவும், தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\

 5 state Assembly poll results won't impact... Ram Vilas Paswan

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல், வரும 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்றும், இதனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் எதிர்க்கட்சியினரும், பாஜகவுக்கு இனி தோல்வி தொடரும் என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில லோக் ஜனசக்தி கட்சி தலைவர் .ராம்விலாஸ் பஸ்வான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறியுள்ளார். 5 state Assembly poll results won't impact... Ram Vilas Paswan

இதுகுறித்து அவர் கூறியதாவது, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அடுத்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக, கூட்டணி அரசு மீண்டும் வெற்றி பெறும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios