Asianet News TamilAsianet News Tamil

எதிரிகளை வீழ்த்த புதிய ரூட் போட்ட அகிலேஷ் - மாயாவதி...! நட்டாற்றில் தவிக்கும் காங்கிரஸ்...!

இரு கட்சிகளும் காங்கிரசை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டாலும் காங்கிரஸின் பாரம்பரிய தொகுதிகளான ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளன.

2019 Parliment election... akhilesh yadav mayawati alliance
Author
Uttar Pradesh, First Published Jan 12, 2019, 11:01 AM IST

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் பகுஜன் கட்சிக்கும் இடையேயான கூட்டணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பா.ஜ.க. அள்ளியது. ஆட்சியைப் பிடிப்பதில் உத்தரப்பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் என்பதால், அந்த மாநிலத்தில் மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வந்தது. ஆனால், காங்கிரஸை கழற்றிவிட்டு அகிலேஷ் யாதவும் மாயாவதியும் புதிய கூட்டணியை உருவாக்கினார்கள். 2019 Parliment election... akhilesh yadav mayawati alliance

மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 6 தொகுதிகளை உதிரிக் கட்சிகளுக்கு வழங்கிவிட்டு எஞ்சிய தொகுதியில் இரு கட்சிகளும் சரிசமமாகப் போட்டியிட முடிவு செய்தன. இரு கட்சிகளும் காங்கிரசை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டாலும் காங்கிரஸின் பாரம்பரிய தொகுதிகளான ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளன. 2019 Parliment election... akhilesh yadav mayawati alliance

இதனால், உ.பி.யில் மறைமுகமாக 2 தொகுதிகளை மட்டும் மாயாவதியும் அகிலேஷும் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்தது. இதைப் பற்றி காங்கிரஸ் கட்சி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே புதிய கூட்டணி குறித்த முறைப்படியான அறிவிப்பை அகிலேஷும் மாயாவதியும் கூட்டாக இன்று லக்னோவில் வெளியிட உள்ளார்கள். இதற்காக இன்று செய்தியாளர்களை இரு தலைவர்களும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios