Asianet News TamilAsianet News Tamil

இந்த மூன்று உணவுப் பொருட்களை வைத்து இரண்டே நாளில்  முடி உதிர்வை தடுக்கலாம்...

These three food items can prevent hair loss in two days ...
These three food items can prevent hair loss in two days ...
Author
First Published Jun 23, 2018, 4:42 PM IST


வாழைப்பழம் 

கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலக்க வேண்டும். பின்னர், ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும்படி தேய்த்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும். கூந்தலும் வளர்ச்சி அடையும்.

கொய்யா

கொய்யாவில் இருக்கும் விட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலக்க வேண்டும். தலைக்கு நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு போய்விடும்.

பப்பாளி 

பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios