Asianet News TamilAsianet News Tamil

நாக்கின் நிறத்தை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தின் அளவை அறியலாம். எப்படி? 

The size of your health can be determined by the color of the tongue. How?
The size of your health can be determined by the color of the tongue. How?
Author
First Published May 25, 2018, 1:52 PM IST


நாக்கின் நிறத்தை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தின் அளவை அறியலாம்

சிவப்பான நாக்கு

வெற்றிலைப் போடாமலேயே சிலருக்கு நாக்கு மிக அதிகமாக சிவந்து காணப்படும். இது வைட்ட மின் பி12 மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு இரு ப்பதற்கான அறிகுறியாகும். இதனால் காரமான அல்லது சூடான உணவுகள் சாப்பிடும் போது வலி ஏற்படும். பெரும்பாலும் சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு நாக்கு இப்படி மிக சிவப்பாக இருக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

கரு நாக்கு

கரு நாக்கு (கருமை அல்லது ப்ரௌன்நிற படிவ ம் நாக்கில் படர்ந்திருக்கும்) உடையவர்கள் சரியாக அவர்களது வாய் மற்றும் பற்களை பரா மரிப்பது இல்லை என்று அர்த்தமாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். நீங்க ள் சாப்பிடும் உணவின் ருசி மாறுபட்டு உணர்வீர்கள். நல்ல டென்டல் மரு த்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிகமாக புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வெள்ளை நாக்கு

நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிரு க்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி. இதனால் ஆன்டி-பயாட்டிக் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டிய து அவசியம்.

நாக்கில் சுருக்கங்கள்

வயது அதிகமானாலோ அல்லது பூஞ்சைத் தொற்று ( Fungal) ஏற்பட்டாலோ இவ்வாறு நாக்கில் சுருக்கம் அல் லது வெட்டு ஏற்பட்டது போல இருக்கும். ஆன்டி-ஃபங்கள் (Anti-Fungal) மருந்துகள் எடுத்துக் கொள்வது தான் இந்த பிரச்சனைக்கானத் தீர்வு.

கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம்

சிலருக்கு கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம் ஏற்பட்டிருக்கும். இதை லியூக் கோப்லாக்கிய (leukoplakia) என்று கூறுகின்றனர். சரியான செல் வளர்ச்சி இல்லாத போது இது தோன்றுகி றது. அதிகமாய் புகைப்பவர்களுக்கு இந்த கீழ் நாக்கு வெள்ளைப் படிவம் ஏற்படுகிறது. இது காலப் போக்கில் புற்றுநோயாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதா க மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிவப்பு சிதைக் காயம்

நாக்கில் சிவப்பாக சிதைக் காயம் ஒரு சில வாரங் களுக்கு மேல் தொடர் ந்து இருப்பதுபோல இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகச்சை மேற்கொள்ளு ங்கள். இது நாக்குப் புற்றுநோயாக இருக்க வாய்ப்பிரு க்கிறது. காரமான உணவுகள் சாப்பிட்டால் ஓரிரு வாரம் இதுப் போன்ற சிவந்த சிதைக்காயம் ஏற்படுவது சகஜம் தான்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios