Asianet News TamilAsianet News Tamil

கொத்துமல்லியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…

medical benefits of coriander
medical benefits of coriander
Author
First Published Oct 23, 2017, 12:48 PM IST


 

** கொத்தமல்லி இலையில் B, B12 & C வைட்டமின்கள் உள்ளது. சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

** இந்த எண்ணெய் மருத்துவ குணம் உடையது. இதில் வையிட்டமின் A, C & k உள்ளது. இதில் கால்சியம், இரும்பு, மெங்னீசியம், பொட்டாசியம், ஜிங் உள்ளது. தோல் வியாதிய்யைக் குணப்படுத்தும்.

** இது கார்ப்பு சுவையுடையது. தனியாவை வணிக ரீதியாகப் பயிரிட அந்த நிலத்தை தொழு உரமிட்டு நன்கு உழவேண்டும். காயவைத்து கட்டிகள் இல்லாமல் சமப்படுத்த வேண்டும். பின் தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். அதன் பின் சமப்படுத்தும் மரத்தில் சமஅளவாக முளைக்குச்சிகள் பொருத்தி ஏர் போல் ஒரு முறை ஓட்ட வேண்டும்.

** பின் வேண்டுமென்றால் பாத்தி பிடித்துக் கொள்ளலாம். அதன் பின் தண்ணீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை வரும்போது விதைகள் முளைத்ததுக் கொள்ளும். தண்ணீர் பாச்சும் போது ஒரு வாரத்தில் விதைகள் முழைக்க ஆரம்பிக்கும்.

** வாரம் ஒரு முறை தண்ணீர் பாச்ச வேண்டும். 90 நாட்க்களில் பூத்துக் காய்க்க ஆரம்பிக்கும். அதன் பின் தண்ணீர் பாச்சக்கூடாது. அதன் பின் செடிகளைப் பிடுங்கி சுத்தமான களத்தில் நன்கு காயவைத்து லேசாக தடியால் அடித்துத் தூற்றி எடுத்து தனியாவை ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டுவார்கள்.

** ஆனால் கொத்துமல்லி இலை சமையலுக்கு மிகவும் தேவைப் படுவதால் வீட்டுத் தோட்டத்திலும் மாடித் தோட்டத்திலும் தேவைக்கு ஏற்ற வாறு கீரையாகப் பயிர் செய்வார்கள்.

** கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

** ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

** கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

** கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.

** கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும்.

** நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.

கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios