Asianet News TamilAsianet News Tamil

உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது என்று இதை வாசிங்க தெரியும். 

Is your heart healthy? I know how to find out how to find it.
Is your heart healthy? I know how to find out how to find it.
Author
First Published May 25, 2018, 1:55 PM IST


ஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் திடீரென்று மாரடைப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

அமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர்.

இப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இரத்த அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது. ஆய்வு முடிவு இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது.

இந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios