Asianet News TamilAsianet News Tamil

இன்பச்செய்தி! இந்த உணவுமுறையை தினமும் பின்பற்றினால்...மாதத்திற்கு இரண்டு கிலோ குறைக்கலாம்...

if you follow this diet daily you can cut two kilos per month ...
if you follow this diet daily you can cut two kilos per month ...
Author
First Published Dec 9, 2017, 1:31 PM IST


நல்ல புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2000 கலோரி தேவையெனில், அதில் 500 கலோரியைக் குறைத்தாலே போதும்.  மாதம் இரண்டு கிலோ எடை குறைந்துவிடும்.

இப்போ உடலை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளுக்கு எந்த மாதிரியான உணவுமுறைகளை பின்பற்றுணும்னு தெரிஞ்சுக்குங்க!

1.. காலையில் எழுந்ததும் 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.

2.. அரை மணி நேர நடைப்பயிற்சி.

3.. வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)

4.. புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட்.   (100 கிராம்)

5.. பத்து மணிக்கு மோர்

6.. 11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்

7.. 12 மணிக்கு இளநீர்

8.. மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.

9.. வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)

10.. 200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.

11.. நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.

12.. வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.

14.. நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.

15.. ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும்  சுண்டல் ஒரு கப்.

16.. காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.  

17.. இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.  

18.. தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.  

இந்த முறையில் உணவுகளை பின்பற்றிவந்தால் மாதம் இரண்டு கிலோ எடையை குறைக்கலாம் ஆரோக்கியமான வழியில்.

Follow Us:
Download App:
  • android
  • ios