Asianet News TamilAsianet News Tamil

தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன பலனெல்லாம் கிடைக்கும் தெரியுமா? 

If you eat a little onions every day do you know what the body gets?
If you eat a little onions every day do you know what the body gets?
Author
First Published Jun 25, 2018, 2:08 PM IST


தினமும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்...

** ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும்.

** இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

** மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

** வெங்காயத்தில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். 

** நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

** வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 

** பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

** வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. 

** வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

** வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios