Asianet News TamilAsianet News Tamil

அழுத்தம்... மிரட்டல்கள்... எச்ஐவி ரத்தம் செலுத்திய கர்ப்பிணிக்கு மனநல சிகிச்சை..!

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி பெண்ணுக்கும் மற்றும் ரத்ததானம் செய்து தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

HIV Blood issue Mental health treatment for sattur
Author
Tamil Nadu, First Published Dec 29, 2018, 12:02 PM IST

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி பெண்ணுக்கும் மற்றும் ரத்ததானம் செய்து தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.HIV Blood issue Mental health treatment for sattur

சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டார். இஅந்த சமபவம் தமிழகத்தையே உலுக்கியெடுத்து வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.HIV Blood issue Mental health treatment for sattur

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்ததானம் செய்த வாலிபர் தினேஷ், மிரட்டல்கள் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். அவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிகிச்சை பெறும் கர்ப்பிணியும், தற்கொலைக்கு முயன்ற வாலிபரும் மன உளைச்சலில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios