Asianet News TamilAsianet News Tamil

கோடை காலத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை தீர்க்க இதோ வழிகள்...

Here are the ways to solve the erosion problem during the summer ...
Here are the ways to solve the erosion problem during the summer ...
Author
First Published Apr 19, 2018, 1:49 PM IST


கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் வேர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.  இதை தவிர்க்க வேண்மெனில் சில விஷயங்களை நாம் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

** உள்ளாடைகளை துவைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே காயப்போடுவது கூடாது. வெயிலில் காயப்போட வேண்டும். அதன்பிறகு தான் அணிய வேண்டும்.

** மற்றவர்களின் பனியன் உள்ளிட்ட உள்ளாடைகளை அணியக்கூடாது.

** காலை மற்றும் மாலை இரண்டு முறையும் உள்ளாடைகளை மாற்றுவது நல்லது.

** அரிப்புக்குக் காரணமாக பூஞ்சான் கிருமி, யாரிடம் இருந்து வேண்டுமென்றாலும் உங்களுக்கு வரலாம்.

** நீங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளிடம் இருந்து கூட உங்களுக்கு அரிப்பு பிரச்சனை வரலாம்.

** உங்களுக்கு பூஞ்சான் கிருமி பாதிப்பு இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வரலாம். எனவே அவர்களையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. 

** அரிப்புக் காரணமாக இந்த பூஞ்சான் கிருமிகளை அழிக்க முறையான சிகிச்சை அவசியம். சில நாட்களில் குணமாகக்கூடிய அளவில் இப்போது உள்ள அரிப்பு பிரச்சனைகள் இல்லை. எனவே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். 

** அதுவரை கைமருத்துவம், பார்மஸில் மருந்துகள் வாங்குவது, உள்ளிட்ட பழக்கங்களை செய்யாதீர். அப்படி நீங்கள் செய்தால் பூஞ்சான் கிருமிகளின் தாக்கம் இன்னும் அதிகமாகும். அரிப்பும் குறையாது. 

Follow Us:
Download App:
  • android
  • ios