Asianet News TamilAsianet News Tamil

இதோ உங்களுக்காக அல்சரை விரைவில் குணமாக்கும் சில அட்டகாசமான டிப்ஸ்...

Here are some cool tips to cure ulcer.
Here are some cool tips to cure ulcer.
Author
First Published May 25, 2018, 2:05 PM IST


அல்சரை விரைவில் குணமாக்கும் சில அட்டகாசமான டிப்ஸ்...

** மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அல்சர் விரைவில் குணமாகும்.

** பச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.

** பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும்.

** வாகை மரப்பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வரலாம்.

** தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆறும்.

** புழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.

** துளசி இலை சாற்றில் மாசிக்காயை நன்கு இழைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வரவும்.

** மாவிலங்கும், நொச்சி, தழுதாழை இவற்றின் சாறு வகைக்கு 50 மிலி எடுத்து, அதில் 35 கிராம் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி, குழம்பு பதம் வந்ததும் பத்திரப்படுத்தி அதில் ஒரு கிராம் அலவு எடுத்து இருவேளை சாப்பிட்டு வர வலியும், அல்சர் & குன்மம் கூட குணமாகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios