Asianet News TamilAsianet News Tamil

இஞ்சி டீ-யை இவர்களெல்லாம் குடித்தால் ரொம்ப ஆபத்துங்க... அதிகமாக குடிக்காதீர்கள்...

Ginger tea is very dangerous for them to drink ... do not drink too much ...
Ginger tea is very dangerous for them to drink ... do not drink too much ...
Author
First Published Jun 25, 2018, 2:18 PM IST


இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

** இஞ்சியை அதிகமாக சாப்பிடும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை எற்படுத்தும்.

** உடல் சென்சிடிவாக இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அலர்ஜியை ஏற்படுத்தும்.

** அன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

** இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இஞ்சி டீயை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?’

** வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

** கர்ப்பிணிகளும் இஞ்சி டீயை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் கர்ப்பப்பையை இறுகச் செய்து, பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

** பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.

** நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios