Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் அல்சர் குணமாகவில்லையா? இந்த ஜீஸை தினமும் குடிச்சிப் பாருங்கள்...

drink this juice for get cure in ulcer
drink this juice for get cure in ulcer
Author
First Published Jul 9, 2018, 1:29 PM IST


கேரட்டில் என்ன இருக்கு?

விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

கேரட்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்...

** கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

** கேரட் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த மற்றும் ஜீரணக் கோளாறுகள் குணமாகுவதுடன் எலும்புகள் உறுதியாகும்.

** உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்து குறைபாடு, தலைமுடி உதிர்வுகளை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

** பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் விட்டமின் இழப்பு, மாதவிலக்கின் போது உண்டாகும் அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு கேரட் சிறந்த தீர்வாக உள்ளது.

** கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக அல்லது சமைத்து சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல், சோர்வுநிலை, ரத்தச்சோகை, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மாலைக்கண் போன்றவை தடுக்கப்படும்.

** கேரட்டின் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

** கேரட் சாறுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை பிரச்சனையை விரைவில் குணமாக்கும்.

** கேரட் ஜூஸை மதிய வேளையில் குடித்து வந்தால் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்தி, சளி, இருமல், வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

** கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை போக்கி, பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க உதவுகிறது.

** கேரட் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது. எனவே கேரட்டை பாதியளவு வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios