Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? டூத் பேஸ்ட் கொண்டு முகப்பருவை சரி செய்யலாம்...

Do you know Fix the acne with tooth paste ...
Do you know Fix the acne with tooth paste ...
Author
First Published May 25, 2018, 2:10 PM IST


அளவுக்கு அதிகமாக உள்ள முகப்பரு பிரச்சனையை சரி செய்ய இதோ சூப்பரான இயற்கை வழிகள்...

** முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும்.

குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும்போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும், பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.

** முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. அதுவும் க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.

** சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். எனவே அத்தகையவற்றால் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.

** பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.

** சருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்த பொருள் என்றால் அது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.

** ‌மிளகு, ச‌ந்தன‌ம், ஜா‌‌தி‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்றை ந‌ன்கு அரை‌த்து முக‌ப்பரு‌வி‌ன் ‌மீது பூ‌சி வர வே‌ண்டு‌ம். முக‌ப்பரு ‌மீது பூ‌சி அ‌ப்படியே காய ‌வி‌ட்டு, அது உல‌ர்‌ந்தது‌ம் கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் முக‌ம் கழு‌வி வர வே‌ண்டு‌ம். இ‌ப்படியே செ‌ய்து வ‌ந்தா‌ல் பெ‌ண்களு‌க்கு வரு‌ம் முக‌ப்பரு மறையு‌ம். மேலு‌ம், ஏ‌ற்கனவே இரு‌க்கு‌ம் முக‌ப்பரு வடு‌க்க‌ள் நாளடை‌வி‌ல் மற‌ை‌ந்து காணாம‌ல் போகு‌ம். 

Follow Us:
Download App:
  • android
  • ios