Asianet News TamilAsianet News Tamil

மனைவியை கடத்தி நாடகமாடிய பவர்ஸ்டார்... சினிமாவையே மிஞ்சிய ட்விஸ்ட்

பைனான்சியர்  தனது ஆட்களை வைத்து பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ஜூலியை கடத்தியதாக எழுந்த புகாரில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Powerstar playing kidnapping game
Author
Ooty, First Published Dec 12, 2018, 12:23 PM IST

பலபேரிடம் லோன் வாங்கித்தருவதாக ஏமாற்றிய பணத்தை வைத்து, அந்த காசில் படம் நடித்து, அந்த பணத்தில் 100 நாட்களுக்கு மேல் தனது படத்தை ஓட்டி தெலுங்கு நடிகர் பவர்ஸ்டாரை பின்னுக்குத் தள்ளி கூகுளை கன்பியூஸ் செய்தது மட்டுமல்லாமல் 
 சந்தானத்தோடு நடிக்கும் அளவிற்கு வளர்ந்த பவர்ஸ்டார். தொடர்ந்து பல படங்களில் காமெடியில் கலக்கி  வந்தார்.
 
இவர் மீது பல பேரிடம் பல கோடிகளை அபேஸ் வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில்,  பவர்ஸ்டாரின்  மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் கணவர் காணவில்லை என புகார் அளித்துள்ளார். பல்வேறு மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில்  விசாரணை நடத்திய  போலீசாருக்கு பல ட்விஸ்ட் அதிர்ச்சியே மிஞ்சியது.

அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நடிகர் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.  சீனிவாசனைத் தேடி அவரின் மனைவி ஜூலி ஊட்டிக்குச் சென்றார். இதனையடுத்து ஜூலை எந்த தகவலும் கொடுக்கவில்லை, சீனிவாசனைத் தொடர்ந்து ஜூலியும் மாயம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னணி வார இதழ் நிருபர்களுக்கு போனில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது ``என்னைக் கடத்தியது உண்மை. இப்போது நான் என் மனைவியுடன் ஊட்டியில் இருக்கிறேன். பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் எனக்கும் பணக் கொடுக்கல் பிரச்னை இருந்துவருகிறது.  அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் சமயத்தில் என்னை அந்த பெங்களூரு டீம் கடத்திவிட்டது. நான் பேச முடியாத இடத்தில் இருக்கிறேன். நடந்த சம்பவத்தை முழுமையாக உங்களிடம் தெரிவிக்கிறேன்" என தொலைபேசி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசனின் குடும்பத்தினர் கூறிய கடத்தல் புகார் சென்னை போலீஸாரை திணறடித்துள்ளது.

இதுதொடர்பாக, காவல்துறை நடத்திய விசாரணையில், பெங்களூரு பைனான்சியர் மசூர் ஆலம் என்பவரை சிக்க வைப்பதற்காக, பவர்ஸ்டார் நடத்திய நாடகம் என்று தெரியவந்துள்ளது. மசூர் ஆலமிடம் வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஊட்டிக்குச் சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன், அவரது உறவினர் கார்த்திகேயனின் உதவியுடன் தனது மனைவியை கடத்தியுள்ளார். மேலும், அந்தக் கடத்தல் பழியை மசூர் ஆலம் மீதும் போட்டுள்ளார். இதுதொடர்பாக, ஆலம் அளித்த புகாரின் அடிப்படையில்  தலைமறைவாக உள்ள சீனிவாசன், அவரது மனைவி ஜூலி, கார்த்திகேயன் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios