Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்... கோவை எஸ்பி பாண்டியராஜன் அதிரடி!!

பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கைக் கோரி பிரபலங்கள் பலர் குரலெழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

pollachi rapists arrest
Author
Pollachi, First Published Mar 11, 2019, 11:05 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசுவை போலீசார் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு உட்பட 5 பேரை போலீசார் கோவை சிறையில் அடைத்துள்ளனர்.  pollachi rapists arrest

இவர்களை அடுத்து  காவல்துறையினர் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு மூலம் மிரட்டி வந்த திருநாவுக்கரசை  கைது செய்தனர். 

திருப்பதியில் தலைமறைவாகி இருந்த திருநாவுக்கரசின் மொபைல் நெட்வொர்க்கை காவல்துறையினர் டிரேஸ் செய்து வந்தனர், கடந்த இலை தினங்களுக்கு முன்பு  இரவு மாக்கினாம்பட்டி அருகே உள்ள அவரின் வீட்டருகில் கடைசியாக அவரின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு  தெரியவந்துள்ளது. 

pollachi rapists arrest

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை திருநாவுக்கரசு சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பணம் வசதி உள்ளதால் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று தோழிகளாகப் பழகிய பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் சபரிஷ், திருநாவுக்கரசு, பார் நாகராஜன் கும்பல் மேலும் பல தகவல் வெளியாகும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று நால்வர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர்  கூறியதாவது; சமூக ஆர்வலர்கள் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தப்படுவதால் அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை பெண்களின் விவரம் சேகரித்து விசாரிக்கப்படும். மானமங்கப்படுத்தும் மன உளைச்சலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் கீழ் மட்டுமே தற்போது குற்றவாளிகள் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

pollachi rapists arrest

பெண்கள்  தாமாக முன்வந்து புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். இதில் 2 பெண்கள் அடையாளம் காணப்படுள்ளனர். மேலும் அவர்களிடன் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்  இந்த வழக்கில் தேவைப்பட்டால் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார். 
 
பொள்ளாச்சி அரசியல்வாதி பார் நாகராஜ் ஜாமீனை எதிர்த்து தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும். இதில் புகாரளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக நாகராஜ், செந்தில்,வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios