Asianet News TamilAsianet News Tamil

நெஞ்சை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் தமிழக அரசு...!

நாட்டியே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Pollachi assault case...cBI investigation
Author
Tamil Nadu, First Published Mar 14, 2019, 12:00 PM IST

நாட்டியே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். இதில் சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. Pollachi assault case...cBI investigation

இந்த வழக்கில் ஆளும்கட்சிக்கு தொடா்பு உள்ளதாக எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சி உறுப்பினா்களுக்கு தொடா்பு உள்ளதாக சட்டப்பேரவை துணை சபாநாயகா் பொள்ளாச்சி ஜெயராமனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Pollachi assault case...cBI investigation

இந்நிலையில், அரசியல் கட்சிகளின் நெருக்கடியை அடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டது. விரைவில் பெண் எஸ்.பி. தலைமையில் விசாரணை தொடங்கும் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. Pollachi assault case...cBI investigation

இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ மாற்றப்பட்டதற்கு தொடர்பாக அரசாணையை வெளியிட்டுள்ளது. சிபிஐ விசாரணையின் போது பல முக்கிய தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios