Asianet News TamilAsianet News Tamil

சபரிமலை போராட்டத்தில் கலவரம்... மோதலில் ஒருவர் பலி.. கேரளாவில் பதற்றம்..!

சபரிமலை சன்னிதானத்திற்குள் இரு பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்ததில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் உருவாகி வருகிறது. 

One killed in Sabarimala protest
Author
Kerala, First Published Jan 3, 2019, 9:43 AM IST

சபரிமலை சன்னிதானத்திற்குள் இரு பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்ததில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் உருவாகி வருகிறது. One killed in Sabarimala protest

சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து போராடி வருகின்றனர். சபரி மலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

 One killed in Sabarimala protest

சபரிமலை பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இரு தரப்பினரும் மாறி, மாறி கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த கலவரத்திற்கு காரணம் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்று பாஜக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios