Asianet News TamilAsianet News Tamil

பல கோடி ரூபாய் மதிப்புடைய மரகத நடராஜர் சிலையை ஆட்டையை போட முயற்சி...!

பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க மர்மநபர்கள் முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Natarajar statue robbery attempt
Author
Ramanathapuram, First Published Nov 4, 2018, 4:38 PM IST

பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க மர்மநபர்கள் முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் சிலை கடத்தல் சம்பவத்தால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.‘

ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் பல நூற்றாண்டு கால நடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பல கோடி மதிப்புள்ள பழமை வாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. இதையொட்டி நேற்று இரவு கோயிலில் பூஜைகள் முடிந்ததும், குருக்கள் கோயிலை பூட்டி கொண்டு விட்டுக்க சென்றனர். கோயில் பாதுகாப்பு பணியில் செல்லமுத்து என்பவர் ஈடுபடார். Natarajar statue robbery attempt

நேற்று நள்ளிரவில் கோயிலுக்கு வந்த மர்மநபர்கள், அங்கிருந்த மரகத நடராஜர் சிலையை  கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு செல்ல முத்து உள்ளே ஓடி சென்றார். அப்போது, அங்கிருந்து மர்மநபர்களை பார்த்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், செல்லமுத்துவின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியனர். இதில் படுகாயமடைந்த அவர், மயங்கி விழுந்தார். மர்மநபர்கள் கருவறைக்குள் உள்ள சிலையை திருட முயன்றபோது, திடீரென அலாரம் அடித்தது. இதனால் பயந்துபோன மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர்.

 Natarajar statue robbery attempt

அலாரம் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் படுயாகமடைந்த செல்லமுத்துவை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கோவிலின் பாதுகாப்பு அதிகாரியான சுப்பையா என்பவர் மாற்றப்பட்டு, கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க மர்மநபர்கள் முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் சிலை கடத்தல் சம்பவத்தால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios