Asianet News TamilAsianet News Tamil

மாமியாரைக் கொன்று மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய தில் லேடி ! பகீர் தகவல்கள் !!

அண்மையில்  இரட்டை கொலை செய்தத கண்ணம்மா, பூங்கொடி ஆகியோர் தனது மாமியாரையும்  கொலை செய்த அடுத்த நாள் பூங்கொடியின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமயபுரத்தில் குழந்தைகளுக்கு மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தி உள்ளனர்.
 

mother in law murder
Author
Tiruppur, First Published Oct 25, 2019, 10:40 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஈச்சநத்தம் அருகே உள்ள தாச நாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி வசந்தாமணி இவர்கள் மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்ட குமார வலசை சேர்ந்த செல்வராஜ் அக்காள் கண்ணம்மாள் வீட்டிற்கு வந்தனர். 

அப்போது செல்வராஜையும், அவரது மனைவி வசந்தாமணியையும் சொத்து தகராறு காரணமாக கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் கொலை செய்து வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்தனர்.

mother in law murder

இதுகுறித்து வெள்ளகோவில். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கண்ணம்மாள் மகள் பூங்கொடியும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாகேந்திரனின் தங்கையான நாகேஸ்வரி  தனது தாய் ராஜாமணியை கடந்த மாதங்ளாக காணவில்லை என வெள்ள கோவில் போலீசில் புகார் செய்தார். கடந்த மே மாதம் வெள்ளகோவிலில் நாகேந்திரன் மாமியார் வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு எனது தாயார் சென்றார். அதன் பின்னர் அவரை காணவில்லை. அவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக புகாரில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ராஜாமணியை  கண்ணம்மாளும், அவரது மகள் பூங்கொடியும் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்தது தெரிய வந்தது.

ஏற்கனவே அவர்கள் இரட்டை கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வெள்ளகோவில் போலீசார் காங்கயம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து ராஜாமணி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜாமணி கொலை செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகி விட்டதால் உடல் எலும்பு கூடாக காட்சி அளித்தது.

உடலை ராஜாமணியின் மகள் நாகேஸ்வரியிடம் போலீசார் காண்பித்தனர். ராஜாமணி அணிந்திருந்த சேலையை வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தனது தாயின் உடல் தான் என நாகேஸ்வரி அடையாளம் காட்டினார்.

mother in law murder

பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் நந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் எலும்புக்கூடு ராஜாமணியின் மகள் நாகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர் அங்குள்ள பொது மயானத்தில் புதைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாணையில்., ராஜாமணியை கொலை செய்த அடுத்த நாள் கண்ணம்மாள், பூங்கொடி ஆகியோர் பூங்கொடியின் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு சமயபுரம் சென்றுள்ளனர். அங்கு 2 குழந்தைகளுக்கும் மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios