Asianet News TamilAsianet News Tamil

என் மனைவியை மீட்டுக் கொடுங்க… 19 வயசுப் பையனோட அவ ஓடிப்போயிட்டா… ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு !!

தருமபுரி அருகே 36 வயதான தன் மனைவி 19 வயது பையனுடன் ஓடிப்போய்விட்டதாகவும் 13 பவுன் நகை மற்றும் 2லட்சம் ரூபாயுடன் சென்றுவிட்ட மனைவியை மீட்டுத் தருமாறும் ஐஸ் வியாபாரி ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ice merchant compalint to police to rescue his wife
Author
Dharmapuri, First Published Nov 13, 2018, 9:58 AM IST

தருமபுரி மாவட்டம் எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். ஐஸ் வியாபாரியான  இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், தமிழ்செல்வி என்ற ஒரு மகள் உள்ளனர்.

தமிழ்செல்வி  அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாரியப்பனின் மனைவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர் நாகராஜுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Ice merchant compalint to police to rescue his wife

முருகம்மாவுக்கு நாகராஜ் சித்தி முறை வேண்டும் என கூறப்படுகிறது. 19 வயதான நாகராஜ் , மாரியப்பன் ஐஸ் வியாபாராத்துக்காக வெளியில் செல்லும்போது முருகம்மாள் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

Ice merchant compalint to police to rescue his wife

இதனை அறிந்த மாரியப்பன் அவர்கள் இருவரையும்  கண்டித்துள்ளார். இந்நிலையில் முருகம்மாவும், நாகராஜும் வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.

இதையடுத்து மாரியப்பன் நேற்று திடீரென்று  மகள் தமிழ்செல்வியுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.. அப்போது தன் உடலில் மண்எண்ணை ஊற்றி கொண்டார். பிறகு மகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார். பிறகு மகளுடன் தீக்குளிக்க முயன்றார்.

Ice merchant compalint to police to rescue his wife

இதை பார்த்து பதறி போன பாதுகாப்பு க்கு நின்றிருந்த போலீசார், 2 பேரையும் காப்பாற்றினர். விரைந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றி அவரிடம் விசாரணை நடத்தினர்.

Ice merchant compalint to police to rescue his wife

அப்போது  மாரியப்பன் தான் ஒரு ஐஸ் வியாபாரி. என் மனைவிக்கு 36 வயசாகிறது. அவர் மகன் முறையுள்ள 19 வயசு பையனுடன் ஓடிவிட்டார். ஓடிப்போகும்போது, வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.

Ice merchant compalint to police to rescue his wife

எனது மனைவியை  போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்றும், உச்சநிதிமன்றம் கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று தீர்ப்பு சொல்லிடுச்சு. இந்த தீர்ப்பால நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்" என பரிதாபமாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Follow Us:
Download App:
  • android
  • ios