Asianet News TamilAsianet News Tamil

கூட்டாக கற்பழிக்கப்பட்ட பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட இளைஞர்... தண்டனை வாங்கிக்கொடுக்க போராட்டம்!!

நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

I vowed to punish my wifes rapists, says husband of rape survivor
Author
Chennai, First Published Jan 15, 2019, 3:18 PM IST

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை பலாத்காரம் செய்த கொடூரமாணவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக போராடியும் வருகிறார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்தர் என்பவருக்கு ஷாயாஜிதா எந்தர் பெண்ணுடன் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயத்திற்கு பின்னர் ஜிஜேந்தருக்கு போன் செய்த மணப்பெண் ஷாயாஜிதா  தன்னை 8 பேர் கொண்ட கும்பலால் தான் கற்பழிக்கப்பட்டதாகவும்,  என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்டு ஆடிப்போன மணமகன் ஜிஜேந்தர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி எதைப்பற்றியும் சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டார்.
 
கல்யாணம் ஆனது முதல் தனது மனைவியை இப்படி செய்த கொடூரமானவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க இதுவரை படாதபாடு பட்டு வருகிறார். தன் சொத்தை விற்று வழக்கை நடத்தி வருகிறார். தன் மனைவியை கற்பழித்தவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் அவரது முயற்சியை   அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios