Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலுக்கு இடையூறு... ஒரே அடியில் கணவனை பரலோகம் அனுப்பிய பாசக்கார மனைவி...!

முதலில் நாங்கள் இருவரும் நட்பாக தான் பழகினோம். பின்னர் நாளடைவில் எங்களது பழக்கம், தகாத உறவாக மாறி, நெருக்கமானோம். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், நான் தினமும் மணிக்கணக்கில் செல்போனில் அவரிடம் பேசினேன். தோழி ஒருவரும் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து ரவி பற்றி பேசி அவர் மீது ஆசையை மேலும் வளர்க்கும் வகையில் எனது மனதை மாற்றினார்.

Husband killed... wife statement
Author
Salem, First Published Nov 19, 2018, 3:07 PM IST

சேலம் கருப்பூர் அருகே உப்புகிணறு கிராமம், பார்வதி தோட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (38). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.இவரது மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் செல்வகுமார், வேலையை விட்டு நின்றார். இதையைடுத்து கடந்த 10ம் தேதி அவரே திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர், மாயமான செல்வகுமாரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. பின்னர் செல்வகுமாரின் தந்தை மாது, மருமகள் ஐஸ்வர்யாவிடம் மகனை பற்றி கேட்டனர். அதற்கு அவர், கணவர் வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக தொழிற்சாலைக்கு சென்றார். அதன்பின் வரவில்லை என கூறியுள்ளார்.Husband killed... wife statement

இந்நிலையில், செல்வகுமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கடும் துர்நாற்றம் விசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, செல்வகுமார் அழுகிய நிலையில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து கருப்பூர் போலீசார் மற்றும் ஓமலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அ வரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், வேறு ஒருவருடன் இருந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கொலை செய்து கிணற்றில் வீசயதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையில், எனக்கு சொந்த ஊர் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி. எனது பெற்றோர் கருப்பூர், உப்புகிணறு, பார்வதி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வார்கள். இதில் செல்வகுமாரின் பெற்றோருக்கும், எனது பெற்றோருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், எனக்கும், செல்வகுமாருக்கும் இரு வீட்டார் பெற்றோர் முன்னிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. செல்வகுமாரின் சொந்த ஊர் மேச்சேரி அருகே உள்ள நரியனூர் . கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பார்வதி தோட்டம் பகுதியில் குடியேறினர். கருப்பூர் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் செல்வகுமார் வேலை பார்த்தார். திருமணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்து, அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகை வீடு எடுத்து வசித்தோம். Husband killed... wife statement

அப்போது, எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகள் கரும்பாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கிறாள். எனது கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் மகள் படிப்புக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். எங்களது வீட்டின் அருகே மாமனார் மாது, மாமியார் பாப்பா ஆகியோர் வசிக்கின்றனர். அவர்களிடம் இருந்து அடிக்கடி குடும்ப செலவுக்கு பணம் வாங்கினேன். குடும்ப செலவுக்கு எத்தனை நாட்களுக்கு இப்படி பணம் வாங்க முடியும். இதனால் நான், செல்வகுமாரிடம் உங்களுக்கு போதிய சம்பளம் இல்லாததால், நீங்கள் கிரானைட் தொழிற்சாலையில் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று கூறினேன். இதனால் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டு வேலையில் இருந்து நின்றுவிட்டார். அதன்பிறகு, வேறு வேலையும் கிடைக்காததால், வீட்டிலேயே இருந்தார்.

வேலையை விட்டு நின்றபிறகு, பிஎப் பணம் மற்றும் சர்வீஸ் பணம் ஆகியவை செல்வகுமாருக்கு வர வேண்டி உள்ளது. இந்த பணத்தை போய் வாங்கி வரும்படி நான் வற்புறுத்தினேன் . ஆனால் அவர் மறுத்து விட்டார். அந்த பணம் எனது 2 குழந்தைகளுக்கும் என்றார். இந்த வேளையில் அதே பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அன்பாக பேசி பழகினார். அவரிடம் எனது வீட்டில் உள்ள குடும்ப பிரச்சனைகள் பற்றி பேசினேன். அதற்கு அவர், எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என கூறினார்.

முதலில் நாங்கள் இருவரும் நட்பாக தான் பழகினோம். பின்னர் நாளடைவில் எங்களது பழக்கம், தகாத உறவாக மாறி, நெருக்கமானோம். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், நான் தினமும் மணிக்கணக்கில் செல்போனில் அவரிடம் பேசினேன். தோழி ஒருவரும் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து ரவி பற்றி பேசி அவர் மீது ஆசையை மேலும் வளர்க்கும் வகையில் எனது மனதை மாற்றினார். இதற்கிடையில் தினமும் காலையில் எனது மகளை பள்ளிக்கு அழைத்து சென்று, வரும்போது என்னுடன் பேசுவதற்காக அதே பகுதியில் ரவி காத்திருப்பார். அவருடன் நீண்ட நேரம் பேசி பழகி வந்தேன்.

 Husband killed... wife statement

எங்களது இந்த விவகாரம் எனது கணவருக்கு தெரிந்தது. இதனால் அவர், என்னை கண்டித்தார். மேலும் மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து தீபாவளிக்கு முன்தினம் எனக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் நான், மாமனார், மாமியாரிடம் எனக்கு உங்கள் மகனுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறினேன். அவர்கள், இது எல்லா வீட்டிலும் நடக்கிறது தான் என்று கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து நான், கணவருக்கு சரியாக உணவு கொடுக்காமல் இருந்து வந்தேன். தொடர்ந்து வீட்டில் சண்டை நடந்து வந்ததால் இது பற்றி ரவியிடம் கூறி செல்வகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கான திட்டத்தை ரவி வகுத்து கொடுத்தார்.

 Husband killed... wife statement 

அதன்படி ரவியுடன் சேர்ந்து சம்பவத்தன்று தோசை சுடும் இரும்பு சட்டியை எடுத்து செல்வகுமாரின் தலையில் ஓங்கி அடித்தோம். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அப்படியே அவரை தூக்கிக் கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கொண்டு போய் போட்டோம். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் நான், எதுவும் தெரியாதது போல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன். கடந்த 15ம் தேதி கருப்பூர் காவல் நிலையத்தில் எனது கணவர் மாயமானதாக ஒரு பொய் புகார் கொடுத்து நாடகமாடினேன். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டேன் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 Husband killed... wife statement

இதையடுத்து ஐஸ்வர்யாவை கைது செய்த போலீசார், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த ரவியை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios