Asianet News TamilAsianet News Tamil

செக்ஸி ஆடை அணிந்து மதத்தை கொச்சை படுத்திய ரெஹனா !  ஜாமின் கொடுக்காமல் விரட்டியடித்த கோர்ட்...

சபரிமலைக்கு செல்ல முயன்று போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்ட சமூகச் செயல்பாட்டாளரான ரெஹனா பாத்திமா மதம் சம்பந்தமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

activist rehana who almost made it to sabarimala arrest
Author
Chennai, First Published Nov 27, 2018, 8:35 PM IST

உச்ச நீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து சமூகச்செயல்பாட்டாளர்களும் பெண்ணியவாதிகளும் சபரிமலைக்கு செல்ல முயற்சித்தனர். அங்கு பாஜக – ஆர்எஸ்எஸ் மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சபரிமலைக்கு பெண்கள் வருவதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் சபரிமலையைக் காப்போம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி போராட்டத்தை தீவிரப்படுத்தியும் வருகின்றனர்.

கடந்த அக்டோபரில்,  ரெஹனாவும் பெங்களுரூவைச் சேர்ந்த கவிதா என்ற பத்திரிகையாளரும் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் மலை அடிவாரத்திற்கு வந்தவுடன் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர். இதனால்  அவர்கள் மலை அடிவாரத்திற்கு வந்தவுடன் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர். இதனால் அவர்கள் தாக்கப்படலாம் என்ற சூழல் நிலவியது. அவர்கள் பெரிய அளவிலான போலீஸ் படையுடன் பாதுகாப்பாக மலைக்கு அழைத்துச் செல்லப்படும்போது அவர்களை நுழையவிடாமல் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே அவரது வீடும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் சுவாமி ஐயப்பன் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு மத அமைதியை குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் கேரள உயர் நீதிமன்றத்தினால் நிராகரி்க்கப்பட்டது.

ரெஹனா பிஎஸ்என்எல்லில் பணிபுரிபவர். இவரது தந்தை ஒரு திரைப்பட இயக்குநர். இவர் ஏற்கனவே இ்ந்துத்துவ அமைப்புகளின் கலாச்சார காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொது இடத்தில் காதல் முத்தம் என்ற நிகழ்ச்சி நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். தன் கணவர் இயக்க, ஓரினச்சேர்க்கையாளர் படத்தில் நடித்த இந்த கருமாந்திரப் பெண், ஐயப்பனின் கருப்பு ஆடையை அணிய எத்தனை துணிவு இருந்திருக்க வேண்டும்? ஆபாச படங்களையும், மது குடிக்கும் படங்களையும் வெளியிட்டவர். 

கிஸ் ஆஃப் லவ்’ என்கிற இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்திருக்கிற ரெஹானா இஸ்லாமிய மத நம்பிக்கைகளை முற்றும் துறந்தவர். இவருக்கு ‘டாப்லெஸ்’ ரஹானா என்ற செல்லப்பெயரே இருக்கும் அளவுக்கு அவ்வளவு டாப்லெஸ் போஸ்களை பல போராட்டங்களிலும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார். நடுத்தெருவில் நடந்த பல முத்தப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

இஸ்லாத்தின் எல்லா கொள்கைகளுக்கும் எதிரான இவரை இஸ்லாத்திலிருந்து இனி விலக்கி வைத்து என்ன பயன்? உள்ளாடையை விலக்க தயங்காத ரெஹானா, இஸ்லாத்திலிருந்து விலக்கி வைத்தால் திருந்தவா போகிறார்?” என்று கேட்டிருக்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios