Asianet News TamilAsianet News Tamil

அம்மாவோடு மகளையும் வேட்டையாடிய காமப்பேய்க்கு நீதிபதி கொடுத்த மரண மாஸ் அடி: தக தக ஊட்டி.

ஊட்டியில், கணவனை இழந்த நடுத்தர வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த சேதுரகுபதி எனும் கார்பென்டர் அப்பெண்ணின் பதின்மூன்று வயது மகளையும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அச்சிறுமி நோய்வாய்ப்பட்டார். இப் புகாரில் கைதான இந்த நபருக்கு முப்பத்து எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 
-செய்தி.  

A sex satan is slapped down by a  heavy weight judgement:Ooty's sensation.
Author
Ooty, First Published Oct 26, 2019, 7:27 PM IST

*ஏழு மாதங்கள் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று உற்பத்தி முடிந்து, தொழிற்சாலைகளை மூடத்துவங்கினர் பட்டாசு உற்பத்தியாளர்கள். இந்த தீபாவளியிலிருந்து ஒரு மாதம் லீவு. இனி அடுத்த தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி அடுத்த மாதம் முதல் துவங்கும். 
-செய்தி.

*தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுங்கட்சியின் அதிகார பலம், பண பலம் இதில் வெளிப்பட்டுள்ளது. இடைத்தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது தமிழக மக்கள் நன்கு அறிந்தத்துதான். ஆளும் கட்சியின்  வெற்றியானது, பெறப்பட்ட வெற்றி. -கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*தமிழக பள்ளி, கல்லூரிகளில் ‘இந்து மாணவர் முன்னணி! இந்து இளைஞர் முன்னணி! எனும் பெயரில் சில அமைப்புகள் ஊடுருவியுள்ளன. இந்த அமைப்புகள் மூலம், மாணவர்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. 
-தீக்கதிர் செய்தி. 

*இடைத்தேர்தல் முடிவு மட்டுமே ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரலாக கருதிவிட முடியாது. தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணி, மக்கள் சக்திகளை ஒன்று திரட்டி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற்ஜும் எனும் நம்பிக்கை தமிழக  மக்களுக்கு நிச்சயம் இருக்கிறது. 
-வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

*சசிகலாவின் விடுதலைக்காக சட்டப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர் உரிய நேரத்தில் விடுதலையாவார். அ.ம.மு.க. எனும் பேரியக்கம் ஏதோ நான்கைந்து சுயநலவாதிகளின் கூடுதாவலால் குலுங்கிவிடாது. அம்மாவின் தொண்டர்கள் எங்களுடன் தான் இருக்கின்றனர். -டி.டி.வி.தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

*அதிகார அழுத்தமும், வரம்பற்ற பணச்செலவும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிர்பந்தத்தை ஏற்படுத்தியதை இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிகார துஷ்பிரயோகங்களின் மூலமும், பண விளையாட்டுக்களின் மூலமும் வாங்கப்பட்ட இந்த வெற்றியாது, நிரந்தரமானது அல்ல. -இரா.முத்தரசன் (சி.பி.ஐ. மாநில செயலாளர்)

*அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது. எதிர்வரும் 2021ம் ஆண்டு  தமிழக சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இரு தொகுதி இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. வரும் பொது தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெறும் என்பதன் அச்சாரமாகவே இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. -  ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்)

*நாட்டின் பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்களில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. அந்த கட்சியானது தேசமெங்கும் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்படப்போவது உறுதி. அதற்கான தொடக்கமே இந்த முடிவுகள். -  பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

*தமிழகத்தில் நடந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், தி.மு.க.  மற்றும் அதன் கூட்டனி கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்துள்ளன. அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. 
-  ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்)

*ஊட்டியில், கணவனை இழந்த நடுத்தர வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த சேதுரகுபதி எனும் கார்பென்டர் அப்பெண்ணின் பதின்மூன்று வயது மகளையும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அச்சிறுமி நோய்வாய்ப்பட்டார். இப் புகாரில் கைதான இந்த நபருக்கு முப்பத்து எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 
-செய்தி.  

Follow Us:
Download App:
  • android
  • ios