Asianet News TamilAsianet News Tamil

அரசியலுக்குத்தான் கூட்டணி தேவை....மன்னிப்பு கேட்பதற்குமா?...கமலைக் காய்ச்சி எடுக்கும் பிரபல எழுத்தாளர்...

அந்தப் படம் பரியேறும் பெருமாள், அசுரன் மாதிரியான இரண்டு ஜாதியினரைப் பற்றிய படமே அல்ல. ஒரே ஜாதியினருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையும் ஆணவமும்தான் படம்! அதில் அவர்கள் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற அடையாளக் குறிப்பு இல்லாமலேயும் அந்தப் படத்தை எடுத்திருக்க முடியும். அந்தப் பாடல் கதாநாயகனை உயர்த்திப் பாடப்பட்டது என்கிறார். கதாநாயகனை உயர்த்திப் பாடிய பாடல்களுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி படத்தின் பாடல்களில் இருந்து ஏராளமான உதாரணங்கள் அவருக்கும் தெரியும்.தேவர் மகனில் இடம்பெற்ற அந்தப் பாடல் நிச்சயமாக அந்த வகையில் சேராது.

writer pattukkottai prabhakar questions kamal
Author
Chennai, First Published Oct 25, 2019, 2:26 PM IST

’தேவர் மகன்’படத்தில் இடம் பெற்ற ‘போற்றிப்பாடடி பெண்ணே...தேவர் காலடி மண்ணே’பாடலைப் படத்தில் வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் கமல் அதில் இளையராஜாவையும் கவிஞர் வாலியையும் கூட்டணிக்குச் சேர்த்திருக்கவேண்டியதில்லை’என தனது முகநூல் பதிவில் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பதிவிட்டுள்ளார்.writer pattukkottai prabhakar questions kamal

இது குறித்து இன்று அவர் எழுதியுள்ள பதிவில்,....ஒரு வார இதழின் பேட்டியில் ஜாதியின் பெயரை படத்தின் தலைப்பில் வைத்தது குறித்தும், ஒரு ஜாதியினரை போற்றி ஒரு பாடல் படத்தில் வைத்தது குறித்துமான கேள்விக்கு அன்புக்குரிய கமல் சரியான பதில் சொல்லவில்லை.

அந்தப் படம் பரியேறும் பெருமாள், அசுரன் மாதிரியான இரண்டு ஜாதியினரைப் பற்றிய படமே அல்ல. ஒரே ஜாதியினருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையும் ஆணவமும்தான் படம்! அதில் அவர்கள் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற அடையாளக் குறிப்பு இல்லாமலேயும் அந்தப் படத்தை எடுத்திருக்க முடியும். அந்தப் பாடல் கதாநாயகனை உயர்த்திப் பாடப்பட்டது என்கிறார். கதாநாயகனை உயர்த்திப் பாடிய பாடல்களுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி படத்தின் பாடல்களில் இருந்து ஏராளமான உதாரணங்கள் அவருக்கும் தெரியும்.தேவர் மகனில் இடம்பெற்ற அந்தப் பாடல் நிச்சயமாக அந்த வகையில் சேராது.

அடுத்து.. அப்படி ஒரு பாடலை படத்தில் எழுதியதற்காக அவரும், இளையராஜாவும், மற்றும் மறைந்த கவிஞர் வாலியின் சார்பாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதில் இளையராஜாவும், வாலியும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? இயக்குனர் கேட்டதற்கிணங்க இளையராஜா அந்தப் பாடலைப் போட்டிருக்கிறார். அவராக தன்னிச்சையாக இப்படி ஒரு பாடல் இடம் பெற்றாக வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. அதேப் போல திரையுலக வரலாற்றில் எந்தக் கவிஞரும் தன்னிச்சையாக முழு சுதந்திரத்துடன் செயல்படுவதில்லை என்பது உலகிற்கேத் தெரியும். ஒரு கவிஞர் எப்படி அந்தப் பாடலை எழுத வேண்டும் என்று விளக்கமாக கேட்டுக்கொள்ளப்பட்டு அதன்பிறகே எழுதுகிறார்.writer pattukkottai prabhakar questions kamal

அப்படி எழுதிய பாடல்களிலும் நிறைய பல்லவிகளும், சரணங்களும் தரப்படுகின்றன. அவை இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யப்பட்டு பல வார்த்தைகளும், வரிகளும் கவிஞரின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி மாற்றி எழுதப்படுகின்றன என்பதே நடைமுறை.ஆக.. ஒரு இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இயக்குனர் விருப்பத்திற்குதான் செய்ல்படுகிறார்கள்.. அப்படியிருக்க ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட பாடல் இடம் பெறுவதற்கும், அந்தப் பாடலின் வரிகளுக்கும் முழுக்க முழுக்க படத்தின் இயக்குனரே பொறுப்பாவார் என்பதெல்லாம் கமலுக்குத் தெரியாமல் இல்லை.

அரசியலுக்குத்தான் கூட்டணி தேவை. மன்னிப்பு கேட்பதற்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios