Asianet News TamilAsianet News Tamil

ஆயிரம் குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கிய கவிஞர் வைரமுத்து !! டெல்டா மாவட்ட மக்ளுக்கு ஆறுதல் !!

கஜா யுலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கவிஞர் வைரமுத்து, 1008 குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கினார்.

vairamuthu gave  Goats to delta people
Author
Thanjavur, First Published Dec 9, 2018, 7:20 AM IST

கடந்த மாதம் 15 தேதி நள்ளிரவு வீசிய கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வாழைஇ தென்னை, மா, பலா, முந்திரி என அந்த மாவ்டடங்களில் இருந்த மரங்கள் அனைத்தும் அடியோடு நாசமாகின. விவாசயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துவிட்டு தற்போது கண்ணீருடன்  செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

vairamuthu gave  Goats to delta people

 

இதே போல் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் கஜா புயலால் செத்து மடிந்தன. இதையடுத்து தமிழக அரசு, எதிர்கட்சிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றன.

vairamuthu gave  Goats to delta people

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சார்ந்த 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகள் வழங்கினார்.

 

தஞ்சாவூரை அடுத்த  வல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து , திக்கற்ற குடும்பக்களுக்கு ஆடுகளை வழங்கினார் 1008 குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கிய அவர், தொடர்ந்து பேசும்போது , கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படுமாறு 1008 குடும்பங்களுக்கு இன்று ஆடுகள் வழங்கியிருக்கிறோம். ஒரு விவசாயி வீட்டில் ஆடுமாடுகள் என்பவை ரேசன் கார்டில் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்கள். ஆள் செத்த வீட்டைவிட ஆடு செத்த வீடு துன்பமானது.மனிதர் செத்த வீட்டைவிட மாடு செத்த வீடு துன்பமானது என்றார்.

vairamuthu gave  Goats to delta people

ஒரு பசுமாடு - ஓர் ஆடு - ஒரு முருங்கை மரம் - ஒரு வெட்டரிவாள் - 50டன் அரிசி - 5000 வார்த்தைகள் இவ்வளவோடு ஒரு விவசாயியின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் இழந்துவிட்டால் கிராமத்து மக்களுக்கு ஏது வாழ்க்கை? புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் வேளாண் குடும்பத்து பெருமக்களே... எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள் என ஆறுதல் கூறினார்.

.

சமுதாயத்தில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களில் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.

vairamuthu gave  Goats to delta people

கஜா புயலை கணக்கெடுக்க வந்த மத்தியக் குழுவினர் கால்களில் விழுந்து சிலபேர் கண்ணீர் விட்டார்கள். யாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை. கேட்பது உங்கள் உரிமை; கொடுப்பது அவர்கள் கடமை. ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்பது எங்கள் எண்ணம். சுட்ட ஓட்டில் சொட்டுநீர் விழுந்ததுமாதிரி இருக்கிறது இந்தச் சிறிய தொகை. இன்னும் பெருந்தொகை வழங்கப்பட வேண்டும் என வைரமுத்து கேட்டுக் கொண்டார்.

.

நிலங்களிலெல்லாம் தென்னை மரங்கள் பிணங்களாக விழுந்துகிடக்கின்றன. தென்னை மரத்திற்கு உயிருண்டு என்று நம்புவதால் அதை 'தென்னம்பிள்ளை' என்று விவசாயி அழைத்தான். இழந்த மரங்கள் நடப்பட வேண்டும் என்றார்.

.vairamuthu gave  Goats to delta people

இந்தியா முழுவதிலிருந்தும் பிலிப்பைன்சிலிருந்தும் தேவையான தென்னங்கன்றுகள் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். தென்னை மரங்கள் பலன்தரும் வரைக்கும் அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios