Asianet News TamilAsianet News Tamil

’மகனுக்கு காலேஜ் ஃபீஸ் கூடக் கட்டாமல் கஷ்டப்படுபவர் நாஞ்சில் சம்பத்’...அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி...

இன்னோவா சம்பத் என்று வலைதலங்களில் பெரிய கோடீஸ்வரர் போல் கிண்டலடிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் 600 சதுர அடி பரப்பளவு வீட்டில் வசிப்பவர், தனது மகனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டக்கூட கஷ்டப்படுபவர் என்ற அதிர்ச்சியான தகவலை ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார். இத்தகவலைக்கேட்டு பார்வையாளர்கள் பலரும் அதிர்ந்தனர்.

rj balaji about nanjil sampath
Author
Chennai, First Published Feb 17, 2019, 2:53 PM IST

'இன்னோவா சம்பத்' என்று வலைதலங்களில் பெரிய கோடீஸ்வரர் போல் கிண்டலடிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் 600 சதுர அடி பரப்பளவு வீட்டில் வசிப்பவர், தனது மகனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டக்கூட கஷ்டப்படுபவர் என்ற அதிர்ச்சியான தகவலை ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார். இத்தகவலைக்கேட்டு பார்வையாளர்கள் பலரும் அதிர்ந்தனர்.rj balaji about nanjil sampath

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’எல்.கே.ஜி’. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. 

அந்நிகழ்ச்சியில் பேசிய பாலாஜி,’’இரண்டு பேருக்கு ரொம்பவே நன்றி சொல்லணும்னு தோணுது. ராம்குமார் சார். அவர், நடிகர் பிரபு சாரின் அண்ணன். மிகப்பெரிய பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனா, பந்தா எதுவும் இல்லாம பழகினார். எனக்குத் தெரிந்து அறுவடைநாள், ஷங்கரின் ‘ஐ’ படங்களில்தான் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டேன். உடனே அவர், ‘உனக்காக நடிக்கிறேன்’னு சொல்லி ஒத்துக்கிட்டார். பிரமாதமாவும் நடிச்சுக் கொடுத்தார். தவிர, ராம்குமார் சார், நல்லா இங்கிலீஷ் பேசுவார். இதுலயும் நிறைய இங்கிலீஷ் டயலாக்கெல்லாம் பேசியிருக்கார்.rj balaji about nanjil sampath

அடுத்து நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்தப் படத்துல அவர் நடிச்சா நல்லாருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். சென்னை பட்டினப்பாக்கத்துல, ஹவுஸிங்போர்டுல வீடு. 600 சதுர அடி வீடு அது. அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியா இருந்துச்சு. அவர்கிட்ட கதையெல்லாம் சொல்லிட்டு, ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.rj balaji about nanjil sampath

ஒருநிமிஷம் யோசிச்சார். என்னைப் பாத்தார். ‘சரி, நடிக்கிறேன். ‘என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுறியா?’ன்னு கேட்டாரு. 40 வருஷமா அரசியல்ல இருக்கார். பல அரசியல்வாதிகள், காலேஜே கட்டியிருக்காங்க. ஆனா நாஞ்சில் சம்பத், பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டமுடியலை. ரொம்பவே வேதனையா இருந்துச்சு. படத்துல அவருக்கு நெகட்டீவ் அரசியல்வாதி ரோல்தான். ஆனா இவரோட குணம் தெரிய ஆரம்பிச்சப்போ, இவரோட நல்ல மனசு புரிஞ்சப்ப, அவரோட கேரக்டரை ரீ ஒர்க் பண்ணினோம். அவரோட குணத்தை வைச்சே கேரக்டர் பண்ணினோம். அடுத்ததா சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிறார் நாஞ்சில் சம்பத் சார். தொடர்ந்து நிறைய படங்கள் நடிச்சு, நிறைய சம்பாதிக்கணும்’ என்றார் பாலாஜி.

Follow Us:
Download App:
  • android
  • ios